PUBLISHED ON : மார் 16, 2025 12:00 AM

தமிழக எம்.பி.,க்களை அவமானப்படுத்தி விட்டதாக புகார் கூறி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, சேலம் மாவட்டம், ஆத்துார், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.
இதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில்,தி.மு.க., என்பதற்கு பதிலாக, 'தி.மு.க., கழகம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த கட்சியின் மூத்த நிர்வாகிகள், 'தமிழ் மொழிக்காக குரல் கொடுக்கும் நம்ம கட்சியில், கட்சி பெயரை கூட, தற்போதுள்ள உடன் பிறப்புகள் சரியாக குறிப்பிடுவதில்லையே' என, தங்களுக்குள் புலம்பினர்.
அவ்வழியே சென்ற பா.ஜ., தொண்டர் ஒருவர், 'அதுசரி... கழகம் என்றாலே, கலகம் தான்னு சிம்பாலிக்கா சொல்றாங்க போலும்...' என, 'கமென்ட்' அடிக்க, அவருடன் வந்தவர்கள் சிரித்தபடியே நடந்தனர்.