Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

PUBLISHED ON : ஜன 11, 2024 12:00 AM


Google News
பழியை சுமக்கும் பரிதாப பஞ்சபூதங்கள்!

என்.ஏ.நாக சுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலகை, இயற்கை எந்தெந்த ரூபத்தில் அழிக்கும் என்பதை முன்னோர் பஞ்ச பூதங்களாக வரையறுத்துள்ளனர். நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களான இயற்கை சக்தியை எதிர்ப்பது, மனித சக்தியால் முடியாது.

இதற்கு, உலகம் முழுதும் பஞ்ச

பூதங்களால் நிகழும் அழிவுகளே சான்று. 2004ல், பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர், 'சுனாமி'யாக தமிழகத்தை சுழன்று அடித்த துயரத்தை, இன்றும் யாரும் மறக்க

முடியாது. இதில், உயிர் கள், உடைமைகளை இழந்தவர்கள், இன்றும் அந்த

வலியில் இருந்து மீளாமல் தவிக்கின்றனர்.

அடுத்து, ஆண்டுதோறும் மழை, வெள்ளம் தமிழக தலைநகரான சிங்கார சென்னையை ஒரு புரட்டு புரட்டுவது வாடிக்கையாகி வருகிறது. 'வரும் வெள்ளத்தை தடுக்கவும், வடிய வைக்கும் வழியும் எங்கள் கைவசம் உள்ளது' என, அரசியல் பண்ணி ஆட்சியை பிடிக்கின்றனரே ஒழிய, விடிவு தான் கிடைத்தபாடில்லை.

'ஆட்சிக்கு வந்து, மூன்று ஆண்டாகியும் ஏன் சரியான நடவடிக்கை இல்லை' எனக் கேட்டால், 'வழக்கத்தை விட அதிகமான மழை' என, அதிகாரிகள் தரப்பு சால்ஜாப்பு சொல்கிறது. இந்த சிக்கல்களில் சிக்காமல் தப்பிக்க வழி என்ன என யோசித்த முதல்வர் ஸ்டாலின், 'நம்மை காத்த பூதங்கள் நம்மை தின்னும் காலம் இது' என புத்தக வெளியீட்டு விழாவில், மழை வெள்ளத்தின் பழியை, பஞ்ச பூதத்தில் ஒன்றான நீர் மேல் சுமத்தி விட்டார்.

அப்படி என்றால், மழை நீர் வடிகால்களுக்கு என ஒதுக்கிய, 4,000 கோடி ரூபாயையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரே விழுங்கி விட்டதா என்று தான் எண்ண தோன்றுகிறது. எது எப்படியோ... ஆட்சியாளர்கள் செய்த தவறுகளுக்கு, பாவம், பஞ்ச பூதங்கள் பழிசுமக்க வேண்டியிருக்கிறது.

பழனிசாமி, பன்னீர்செல்வம் இணைய வேண்டும்!

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பதவி ஆசையை விட்டுக் கொடுக்க மனமில்லாத பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு சுயநலவாதிகளிடம் அ.தி.மு.க., சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. கட்சியின் துரோகி, தி.மு.க.,விடம் ரகசிய கூட்டு வைத்திருப்பதாக கூறி, ஒருவரையொருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டி, காமெடி செய்கின்றனர்.

'பழனிசாமி சிறை செல்வது உறுதி' என்கிறார் பன்னீர்செல்வம். இருவர் மீதும் வழக்குகள் இருப்பதை நினைவுபடுத்த வேண்டியது அவசியம்.

'தி.மு.க., அமைச்சர்கள் வரிசையாக சிறை செல்வர்' என, ஆருடம் கூறிய பழனிசாமி மீதான வழக்கு விசாரணையை, ஸ்டாலின் நினைத்தால் துரிதப்படுத்த முடியும். ஆனால், மத்திய அரசின் அதிரடிகளில் இருந்து, தன் கட்சி அமைச்சர்களையே காக்க முடியாமல் தவிப்பவர், நிச்சயம் அ.தி.மு.க.,வினர்

மீது கவனம் செலுத்த மாட்டார்.

கட்சியின் பிற தலைவர்களின் வற்புறுத்தலால், சிறுபான்மையினரின் ஆதரவை பெற, பா.ஜ., கூட்டணியை முறித்து விட்டதாக சப்பைக்கட்டு கட்டுகிறார் பழனிசாமி. இதனால், மிகப்பெரிய இழப்பை அ.தி.மு.க., சந்திக்கப் போவது உறுதி. பிரதமர் வேட்பாளர் யார் என அறிவிக்காமல், தேர்தலை சந்திப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

'சிறுபான்மையினர் பாதுகாவலர் நாங்கள் தான்' என தம்பட்டம் அடிக்கும் திராவிட கட்சிகளின் வேஷத்தை, சிறுபான்மையினர் புரிந்து கொள்ள துவங்கி விட்டனர். மத்திய அரசின் நலத்திட்டங்களை, மக்களிடம் கொண்டு செல்ல அண்ணாமலை போன்ற தலைவர்கள் முயற்சிப்பதால், சிறுபான்மையினரே பா.ஜ.,வை ஆதரிக்கும் நிலைக்கு மாறி வருகின்றனர்.

வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., ஜெயித்து மீண்டும் மத்தியில் ஆட்சி அமைந்தால், 'அ.தி.மு.க., பைல்ஸ்' வெளியிடவும் அண்ணாமலை தயங்க மாட்டார்.

இதை அவர் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.கடந்த, 1987-ல் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என, பிளவுபட்டு கிடந்த அ.தி.மு.க., ஒன்றிணைந்த பின் தான் மீண்டும் உயிர் பெற்றது. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி விட்டுக் கொடுக்காமல் அடம் பிடித்திருந்தால், இன்று அ.தி.மு.க., என்ற கட்சியே இல்லாமல் போயிருக்கும்.

அதுபோல பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பிடிவாதத்தை தளர்த்தி, விட்டுக் கொடுத்து, பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். அதுதான் கட்சிக்கும், அவர்களுக்கும் நல்லது.

வாயைப் பொத்திக் கொள்வது உத்தமம்!

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வீண் வம்பை விலைக்கு வாங்கும் வகையில், தேசியவாத காங்., கட்சி நிர்வாகி ஜிதேந்திர ஆவாத், ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார்.

பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க, நிதீஷ்குமாருக்குத் துணை நிற்பவர், தேசியவாத காங்., கட்சித் தலைவர் சரத் பவார்.

இவர் கட்சி நிர்வாகி ஆவாத், 'ராமாயணத்தில், ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார் என்று சொல்லப்படுகிறது. காட்டில் எங்கு சைவ உணவு கிடைக்கும்? ராமர், க்ஷத்ரியர். பகுஜன். புலால் தான் அவர் உணவு. ராமர், எங்களவர். அவரை நாங்கள் பின்பற்றுகிறோம்' எனக் கூறி இருக்கிறார்.

வரும் லோக்சபா தேர்தலில், அயோத்தி ராமர் கோவிலை முன்னிறுத்த பா.ஜ., முனையும்; அந்த நேரத்தில், சனாதனம், ராமர் அசைவர் போன்ற எதிர்மறை கருத்துக்களை உரக்க பிரச்சாரம் செய்வது, சொந்த காசில்

சூன்யம் வைத்து கொள்வது போல!ராமர் என்ன சாப்பிட்டார் என ஆராய்ச்சி செய்யும் முன், மஹாராஷ்டிரா மாநிலத்தில், விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை ஆராய்ச்சி செய்து நிவாரணம் கூறினால், 'இண்டியா' கூட்டணிக்கு ஓட்டு அதிகரிக்கும்.

லோக்சபா தேர்தல் முடியும் வரை, 'இண்டியா' கூட்டணியின் இரண்டாம் கட்சித் தலைவர்கள், வில்லங்கமான பேட்டிகளைத் தவிர்த்து, வாயைப் பொத்திக் கொள்வது உத்தமம்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us