Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/குடியரசு நாளில் தேசியக்கொடி மளிகை கடைக்காரர் தானம்

குடியரசு நாளில் தேசியக்கொடி மளிகை கடைக்காரர் தானம்

குடியரசு நாளில் தேசியக்கொடி மளிகை கடைக்காரர் தானம்

குடியரசு நாளில் தேசியக்கொடி மளிகை கடைக்காரர் தானம்

UPDATED : ஜன 25, 2024 05:04 AMADDED : ஜன 25, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே செருவாவிடுதி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார், 65, என்பவர், சிறிய அளவில் மளிகை கடையை, 35 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இவர், கடந்த, 28 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு தேசிய கொடியை தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தின் போது, இதை ஒரு தொண்டாக செய்து வருகிறார். மேலும், அந்த நாட்களில், ஓய்வுபெற்ற ஆசிரியர்களை தன் கடைக்கு வரச் சொல்லி, தேசியக் கொடி ஏற்ற வைத்து, அவர்களை கவுரவப்படுத்துகிறார். இதற்காக, ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இதற்காக நான் யாரிடமும் நிதியுதவி பெறுவது இல்லை. கடையில் வியாபாரப் பணத்தில் தினமும் நுாறு ரூபாயை எடுத்து வைத்து விடுவேன். நாம் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்பது நம் கடமை. குழந்தைகளிடம் தேசிய உணர்வை வளர்க்கும் வகையில் மனத் திருப்திக்காக நான் இதை செய்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us