Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார்

பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார்

பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார்

பெருமாளை இழிவுபடுத்தி பாடிய நடிகர்கள் சந்தானம், ஆர்யா மீது புகார்

ADDED : மே 12, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
சேலம் : 'திருப்பதி பெருமாளை இழிவுபடுத்தி, நடிகர்கள் சந்தானம், ஆர்யா பாடல் உருவாக்கி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் பா.ஜ., கிழக்கு மாவட்ட செயலரும், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவருமான அஜீத், அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய செயலர் கிருபாகரன் உள்ளிட்ட சிலர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

ஹிந்து மக்களால் புனிதமாக கருதப்படும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்று, ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாள் கோவில்.

ஹிந்து மத உணர்வை புண்படுத்தும் விதமாக, டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில், 'கோவிந்தா கோவிந்தா கிசா 47...' என்ற பாடலை பாடி, வெளியிட உள்ளனர்.

அதில், பெருமாளையும், அவர் இருக்கும் புனித தலமான திருப்பதி கோவிலையும் அசிங்கப்படுத்தி, நடிகர்கள் சந்தானம், ஆர்யா உள்ளிட்டோர் பாடல் உருவாக்கியுள்ளனர். அந்த பாடலில், 'பார்க்கிங் காசுக்கு கோவிந்தா, பாப்கார்ன் டாக்ஸ் கோவிந்தா, ஹீரோயின் நடிப்புக்கு கோவிந்தா...' என பெருமாளை அவமதிக்கும் வகையில் பாடி உள்ளனர்.

வாய்மொழியாகவும், செய்கையாகவும், மத வழிபாடு, சடங்குகளை தவறாக சித்தரித்து பாடிய சந்தானம், ஆர்யா மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us