Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : ஜூலை 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
பா.ம.க., தலைவர் அன்புமணி: விக்கிரவாண்டியில், தி.மு.க.,வினரால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேட்டி, சேலைகளை, பா.ம.க.,வினர் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். விக்கிரவாண்டியில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கும் தி.மு.க., வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கவும், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்கவும் முயற்சிக்கிறது.

டவுட் தனபாலு: வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்ததை தட்டி பறிச்சு, அதிகாரிகளிடம் குடுத்துட்டீங்களே... உங்களுக்கு ஓட்டு போடலாமான்னு யோசனை பண்ணிட்டு இருந்தவங்க கூட, இனிமே, ஓட்டு போடணுமான்னு சிந்திக்க துவங்கிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!



மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி: பெட்ரோலியம் என்பதுமுற்றிலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்டவை. பெட்ரோல் விலை குறைப்பது பற்றி மட்டும் யோசிக்காதீர்கள்; அதற்கு சரியான வழி எது என்பது குறித்து யோசிக்க வேண்டும். கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பற்றி, நாம் அனைவரும் புரிந்து கொண்டால், விலை குறைப்பு பற்றி கேள்வி வராது.

டவுட் தனபாலு: புதுசா பதவியேற்ற மத்திய அமைச்சர்கள், 'இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'னு பொத்தாம் பொதுவா பதில் சொல்லிட்டு நழுவிடுவாங்க... ஆனா, 'விலை குறைப்பை பத்தி எல்லாம் யோசிக்க கூடாது' என்று உண்மையை பளிச்சுன்னு பேசிய உங்களை, 'டவுட்'டே இல்லாம பாராட்டலாம்!



முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா: அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு பணி 90 சதவீதம் நன்றாக உள்ளது. இன்னும் 10 நாட்களில் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன்; விபரம் விரைவில் அறிவிக்கப்படும். இது, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். என்னுடன் வருவோரை, சுற்றுப்பயணத்தின் போது தெரிந்து கொள்வீர்கள்.

டவுட் தனபாலு: நீங்க தான், ஒருங்கிணைப்பு பணிகள் சூப்பரா நடக்குதுன்னு சொல்றீங்க... ஆனா, அ.தி.மு.க., என்ற ஆலமரத்தில் சிறிய சலசலப்பு கூட ஏற்பட்ட மாதிரி தெரியலையே... எனவே, உங்க சுற்றுப்பயணம் என்பது, வேனுக்கு வெட்டியா டீசல் செலவை தான் தரும் என்பதில், 'டவுட்'டே இல்லை!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us