Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
தமிழக பா.ஜ., துணை தலைவர் நயினார் நாகேந்திரன்: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., தோல்வியடைந்தது குறித்து எவரும் கவலைப்பட வேண்டாம். பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. தைரியமாக அடுத்து உள்ளாட்சி, சட்டசபை தேர்தல்களுக்கு தயாராக வேண்டும். அதற்காக, கட்சி நிர்வாகிகள் உடனடியாக களம் இறங்கி பணியாற்ற வேண்டும். மாற்று கட்சிகளில் இருந்து பா.ஜ.,வில் இணைவோருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால், அவர்களும் வளர்ந்து கட்சியையும் வளர்ப்பர்.

டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வில் இருந்து வந்த உங்களுக்கு, சட்டசபை கட்சி தலைவர் பதவி, மாநில துணை தலைவர் பதவிகளை வாரி வழங்கியிருக்காங்களே... ஆனா, இப்படி எல்லா பதவிகளையும் மாற்று கட்சியினருக்கே தந்துட்டா, பாரம்பரியமா பா.ஜ.,வில் இருப்பவங்களுக்கு அல்வா தானா என்ற, 'டவுட்' வருதே!



விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும்மத்திய அரசு, மது ஒழிப்பை பற்றி கண்டு கொள்ளவில்லை. இந்திய அளவில், இளம் தலைமுறையினர் பாழாகி வருவதை எண்ணி வேதனை அடைகிறேன். மத்திய அரசுக்கு இந்த வேதனை இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆகவே, இந்திய அளவில் பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.

டவுட் தனபாலு: 'தமிழகத்தில், எங்க கூட்டணி பார்ட்னரான தி.மு.க.,வுக்கு அந்த வேதனை இல்லை; எனவே, மத்திய அரசாவது, பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, தமிழக அரசுக்கு குட்டு வைக்கணும்' என்பதை தான் இப்படி நாசுக்கா கேட்கிறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: ஜூலை 16ம் தேதி, 36வது ஆண்டில் பா.ம.க., அடியெடுத்து வைக்கிறது. கட்சி துவங்கி 35 ஆண்டுகளாகியும், ஆட்சி பொறுப்பை அடைய முடியவில்லை என்ற இயலாமையை ஒப்புக்கொள்ளும் போது மனம் வலிக்கிறது. ஆட்சியில் இருந்த, ஆட்சியில் இருக்கும் கட்சிகளால் கூட சாத்தியமற்ற பல மக்கள் நல பணிகளை பா.ம.க., செய்துள்ளது என்ற உண்மையை எதிரிகளால் கூட மறுக்க முடியாது.

டவுட் தனபாலு: மதுவிலக்கு, சமூக நீதி போன்ற உயரிய கொள்கைகளை வச்சிருந்தும், உங்க கட்சியால் ஏன் ஆட்சி அமைக்க முடியலை... பா.ம.க.,வை குறுகிய வட்டத்துக்குள் அடைச்சது யாரு என்ற, 'டவுட்'டுக்கு விடை தேடினாலே, டாக்டரின் ஆதங்கத்துக்கும் பதில் கிடைக்குமே!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us