/தினம் தினம்/செய்தி எதிரொலி/ ‛தினமலர்' செய்தி எதிரொலி திருத்தணி அம்மா உணவகத்தில் ஆய்வு ‛தினமலர்' செய்தி எதிரொலி திருத்தணி அம்மா உணவகத்தில் ஆய்வு
‛தினமலர்' செய்தி எதிரொலி திருத்தணி அம்மா உணவகத்தில் ஆய்வு
‛தினமலர்' செய்தி எதிரொலி திருத்தணி அம்மா உணவகத்தில் ஆய்வு
‛தினமலர்' செய்தி எதிரொலி திருத்தணி அம்மா உணவகத்தில் ஆய்வு
PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM
திருத்தணி:திருத்தணி ரயில் நிலையம் எதிரே, ம.பொ.சி.சாலையில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு காலையில் இட்லி, பொங்கல் போன்ற உணவுகள், 200க்கும் மேற்பட்டோருக்கு மலிவு விலையில் வழங்கப்படுகிறது.
அதே போல், மதியம் சம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் புளியோதரை போன்ற உணவும் மலிவு விலையில், 300 பேருக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் அம்மா உணவகத்தில், பயனாளிகளுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்விசிறி மற்றும் சுகாதாரம் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் உணவும் சில நேரங்களில் தரம் குறைவாக வழங்கப்படுவதாக பயனாளிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று காலை திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., எஸ்.சந்திரன் அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது, சமையல் அறை, உணவு பொருட்கள் இருக்கும் அறை மற்றும் பயனாளிகள் சாப்பிடும் இடம் ஆகியவற்றை ஆய்வு எம்.எல்.ஏ., சந்திரன், உணவு தரம் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் உணவு மற்றும் பொருட்கள் தரம் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து திருத்தணி அடுத்த கோரமங்கலம் காலனி அரசு தொடக்கப் பள்ளியில் முதல்வரின் சிற்றுண்டி உணவு திட்டத்தில் வழங்கும் உணவை ஆய்வு செய்தார்.