/தினம் தினம்/செய்தி எதிரொலி/ கோவில் முன் நிழற்கூரை மீண்டும் துவங்கிய பணி கோவில் முன் நிழற்கூரை மீண்டும் துவங்கிய பணி
கோவில் முன் நிழற்கூரை மீண்டும் துவங்கிய பணி
கோவில் முன் நிழற்கூரை மீண்டும் துவங்கிய பணி
கோவில் முன் நிழற்கூரை மீண்டும் துவங்கிய பணி
PUBLISHED ON : ஜூலை 24, 2024 12:00 AM

திருப்பூர்;கிடப்பில் போட்டுக் கிடந்த, சடையப்பன் கோவில் முன்புறம் நிழற்கூரை அமைக்கும் பணி மீண்டும் துவங்கியது.
திருப்பூர் யூனியன் மில் ரோட்டிலிருந்து வாலிபாளையம் செல்லும் ரோட்டில் சடையப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் முன், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், நிழற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. இரும்பு துாண் அமைக்க கான்கிரீட் தளம் போட்டு இரும்பு அடித்தளம் அமைக்கப்பட்டது.
அதன்பின் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. நிழற்கூரை அமையவுள்ள இடத்தின் வழியாக மின் கம்பிகள் கடந்து செல்லும் நிலையில், அதற்கு மாற்று வழி ஏற்படுத்தாமல் தாமதம் நிலவியது.
இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக, மின் கம்பிகளை புதை வடமாக மாற்றி, தரை வழியாகக் கொண்டு செல்லும் பணிகள் துவங்கியுள்ளது.
இப்பணி முடிந்தவுடன், நிழற்கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.