/தினம் தினம்/செய்தி எதிரொலி/ ஊராட்சிகளில் மேல்நிலைத்தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் தினமலர் செய்தி எதிரொலி ஊராட்சிகளில் மேல்நிலைத்தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் தினமலர் செய்தி எதிரொலி
ஊராட்சிகளில் மேல்நிலைத்தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் தினமலர் செய்தி எதிரொலி
ஊராட்சிகளில் மேல்நிலைத்தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் தினமலர் செய்தி எதிரொலி
ஊராட்சிகளில் மேல்நிலைத்தொட்டிகள் சுத்தம் செய்யும் பணி தீவிரம் தினமலர் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஜூலை 23, 2024 12:00 AM
கம்பம்: ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பல ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரித்து வழங்கப்படுவதில்லை. ஆற்று நீரை அப்படியே பம்பிங் செய்து சப்ளை செய்கின்றனர். குளோரின் கலப்பதிலும் கவனம் செலுத்துவதில்லை. குறிப்பாக மேல்நிலை தொட்டிகள் ஓராண்டுக்கு ஒருமுறை சுத்தம் செய்யும் நிலை உள்ளது. சமீபத்தில் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம் வட்டாரங்களில் பரவலாக வயிற்றுப்போக்கு , மஞ்சள்காமாலை பரவியது. இது தொடர்பாக நினமலர் நாளிதழில் செய்தி வெளியானது
இதனை தொடர்ந்து மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவஹர், வட்டார மருத்துவ அலுவலர்கள் கண்காணிப்பில் சுகாதார மேற்பார்வையாளர்கள், ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்யவும், குளோரின் முறைப்படி கலக்கவும் வலியுறுத்தினார்கள்.
சுகாதாரத்துறை நடவடிக்கையால், ஊராட்சிகளில் தற்போது குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
15 நாட்களுக்கு ஒரு முறை மேல்நிலைத் தொட்டிகளை சுத்தம் செய்யவும், ஆயிரம் லிட்டருக்கு 4 கிராம் குளோரின் கலப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.