Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

PUBLISHED ON : ஜூன் 20, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அறிவியல் ஆயிரம்

பனி - மூடுபனி வித்தியாசம்

குளிர்காலங்களில் இரவு, அதிகாலையில் பனி அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறோம். சூடான தண்ணீர் நீராவியாக மாறி நிலத்தின் மேல் பகுதிக்கு வரும்போது, அங்கே குளிர்ச்சியான காற்றுடன் சேர்கிறது. அதனால் கண்ணுக்குத் தெரியாத நீராவி, கண்ணால் தெரியும் பனியாக மாறுகிறது. இவற்றில் சிறிய நீர்த்துளிகள் காற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன. இவை தான் பனி. பனி - மூடுபனி இடையே வித்தியாசம் உள்ளது. சற்று தொலைவில் உள்ள பொருட்களை நாம் பார்க்க முடிந்தால் பனி. இல்லையெனில் அது மூடுபனி. ஏனெனில் இதன் அடர்த்தி அதிகம்.

தகவல் சுரங்கம்

உலக அகதிகள் தினம்



உலகில் போர், பயங்கரவாதம், பட்டினி, வறுமை உட்பட பல காரணங்களால் மக்கள் அகதிகளாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி ஜூன் 20ல் உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'உலகத்திற்கு அகதிகள் வரவேற்கப்படுகின்றனர்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 2023 கணக்கின் படி 11.73

கோடி பேர் அகதிகளாக உள்ளனர். உலகின் மொத்த அகதிகள் எண்ணிக்கையில் 64 லட்சம் பேர் சிரியாவில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் ஆப்கன் (61 லட்சம்) உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us