PUBLISHED ON : ஜூன் 19, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
நுரையின் நிறத்துக்கு காரணம்
ஒரு பொருளின் நிறம் என்பது அது எந்த நிறத்தை எதிரொளிக்கிறதோ அதை பொறுத்தது. குளியல், துணி துவைக்க பயன்படுத்தும் சோப்புகள் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. ஆனால் அதன் நுரைகள் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். நுரை என்பது எண்ணற்ற மிகச்சிறிய நீர்க்குமிழிகள். இதற்குள் காற்று அடைபட்டுள்ளது. அவற்றின் வடிவம் உருண்டையாக உள்ளது. இதனால் அவற்றின் மீது விழும் ஒளி அனைத்து திசைகளிலும் எதிரொளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து நிறங்களும் கலந்து நமக்கு வெண்மையாக கண்ணாடி போல காட்சியளிக்கிறது.
தகவல் சுரங்கம்
பாலியல் வன்கொடுமை தடுப்பு தினம்
இரண்டாம் உலகப்போருக்குப்பின், பெரிய போர், சண்டையை உலகம் தற்போது சந்தித்துள்ளது. 11.70 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதில் ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - பாலஸ்தீனம், சூடான், சிரியா உள்நாட்டு போர் உள்ளிட்டவை அடங்கும். போர் சூழலில் பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளை தடுக்க வலியுறுத்தி, ஐ.நா., சார்பில் ஜூன் 19ல் போர்களில் பாலியல் வன்கொடுமையை ஒழிக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மருத்துவமனை உள்ளிட்ட சுகாதார வசதியுள்ள இடங்களை பாதுகாக்க வேண்டும் என்பது இந்தாண்டு மையக்கருத்து.