PUBLISHED ON : ஜூன் 21, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
நீரில் தோல் சுருங்குவது ஏன்
கை, கால்களை தண்ணீரில் நனைக்கும்போது சாதாரணமாக இருக்கும். ஆனால் நீண்ட நேரம் வைத்திருந்தால் தோல் சுருங்கி விடும். இதற்கு காரணம் சாதாரணமாக நனைக்கும் போது, உடலில் சீபம் சுரந்து தோலுக்குள் தண்ணீர் செல்லாமல் பாதுகாக்கிறது. நீண்ட நேரம் வைத்திருக்கும்போது, அந்தளவு சீபம் சுரக்காது. இதனால் தோலுக்குள் தண்ணீர் நுழைந்து, தோல் சுருக்கமடைகிறது. பின் தண்ணீரிலிருந்து எடுத்த சிறிது நேரத்தில் தண்ணீர் வெளியேறி, மீண்டும் சீபம் சுரந்து இயல்பு நிலைக்குத் திரும்பும். சீபம் என்பது உடலிலுள்ள செபாசியஸ் சுரப்பிகளால் உற்பத்தியாகும் ஒருவித எண்ணெய்.
தகவல் சுரங்கம்
சர்வதேச யோகா, இசை தினம்
தினமும் யோகாசனம் செய்தால் உடலும், மனதும்இளமையாகவே இருக்கும். யோகாவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும்விதமாக ஜூன் 21ல் உலக யோகா தினம் கடைபிடிக்கபடுகிறது. 2014ல் பிரதமர்மோடியின் கோரிக்கையை ஏற்று ஐ.நா., சபை இத்தினத்தை அங்கீகரித்தது. யோகாசனம் உடலுக்கு மட்டுமல்ல; மனதையும் மகிழ்ச்சியாக வைக்கிறது.
* 'இசைக்கு மயங்காதோர் எவருமில்லை. எதிர்கால தலைமுறையினரிடம் இசை ஆர்வத்தை வளர்க்கும் விதமாக ஜூன் 21ல் உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.