Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
கொரோனாவில் தப்பித்த திமிங்கலம்

2020ல் பரவிய கொரோனா வைரசால் உலகமே முடங்கியது. இந்நிலையில் அச்சமயத்தில் ஆஸ்திரேலியாவின் 'ஹம்பேக்' திமிங்கலம் இனம் ஆரோக்கியமாகவும், மன அழுத்தம் குறைந்தும் காணப்பட்டது. கடலில் மக்களின் நடவடிக்கை குறைந்ததே இதற்கு காரணம் என குயின்ஸ்லாந்து பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. டிரோன் கேமராவை வைத்து ஆய்வு செய்ததில் இதை கண்டறிந்தனர். இவை ஆண்டுதோறும் 16 ஆயிரம் கி.மீ., இடம் பெயர்கிறது. இவை முதன்முதலில் 1756ல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் நீளம் 50 - 56 அடி. எடை 40 ஆயிரம் கிலோ.

தகவல் சுரங்கம்


பிசியான ரயில் நிலையம்



மேற்கு வங்கத்திலுள்ள ஹவுரா ரயில் நிலையம், இந்தியாவின் பிசியான ரயில் நிலையம் என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பழமையான, பெரிய ரயில் நிலையங்களில் ஒன்று. 1854 ஆக. 15ல் இங்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்போது தினமும் 600 ரயில்கள் (பயணிகள், சரக்கு ரயில் உட்பட), இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. தினமும் 10 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். 23 ரயில் பிளாட்பார்ம்கள் உள்ளன. ரயில் நிலையத்துக்கு அருகே 2006ல் ரயில் மியூசியம் திறக்கப்பட்டது. இது கிழக்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் செயல்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us