PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
ஒலியின் வேகம் எதில் அதிகம்
பல வித ஒலிகளை கேட்கிறோம். ஒவ்வொரு ஒலிக்கும் குறிப்பிட்ட சில பண்புகள் உள்ளன. ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள ஒலி முக்கியம். ஒரு பொருள் அதிர்வுக்கு உட்படுத்தப் படும்போது ஒலி உருவாகிறது. ஒலி என்பது ஒருவகை ஆற்றல். ஒலி வெற்றிடத்தில் பரவ இயலாது. ஒலி பரவுவதற்கு காற்று, திரவம், திடப்பொருள் தேவை. ஒலியின் வேகம் திரவங்களை விட திடப்பொருள்களில் அதிகம். ஒலியின் வேகமானது வெப்பநிலை, அழுத்தம், ஈரப்பதம் உள்ளிட்ட பண்புகளை பொருத்து மாறுபடும். வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒலி வேகமும் அதிகரிக்கிறது.
தகவல் சுரங்கம்
நீளமான மூங்கில் பாலம்
உலகின் நீளமான மூங்கில் பாலம் கம்போடியாவில் உள்ளது. நீளம் 3000 அடி. இது 50 ஆயிரம் மூங்கில் கம்புகளால் செய்யப்பட்டது. கம்போடியாவின் கோஹ் பான் தீவில் 1000 பேர் வசிக்கின்றனர். இவர்கள் மெகாங் ஆற்றை கடந்து செல்வதற்காக இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் இருக்கும் போது படகை பயன்படுத்தும் இப்பகுதி மக்கள், தண்ணீர் குறைந்திருக்கும் கோடை காலத்தில் மட்டும் ஆற்றை கடக்க இப்பாலம் அமைக்கப் படுகிறது. அதே போல மழைக்காலம் வந்ததும் மூங்கில் பாலம் அகற்றப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.