Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

PUBLISHED ON : ஜூலை 08, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அறிவியல் ஆயிரம்

விண்கல் பூமியை தாக்குமா...

சூரிய குடும்பம் உருவானபோது கோளாக உருவாகாமல் நின்று போன எச்சங்கள் தான் விண்கல் அல்லது சிறுகோள் என அழைக்கப்படுகிறது. '2024 எம்.டி.1' என்ற விண்கல் இன்று (ஜூலை 8) பூமிக்கு அருகே கடந்து செல்கிறது. அப்போது பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., துாரத்தில் இருக்கும். மணிக்கு 65,215 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகிறது. இதன் விட்டம் 260 அடி. இது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலைக்கு சமம். இதன் அளவு, வேகத்தை வைத்து இந்த விண்கல் மீது விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தகவல் சுரங்கம்

நெருப்பு கோழி

உலகின் பழமையான (41 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ) நெருப்புகோழி கூடு, சமீபத்தில் ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டது. நெருப்பு கோழி பெரிய பறக்காத பறவை. இதில் இரண்டு வகை உள்ளன. இதன் எடை 63.5 - 145 கிலோ இருக்கும். இதன் உயரம் 6 - 9 அடி இருக்கும். தரையில் வாழும் உயிரினங்களில் பெரிய முட்டையிடுவது இதுதான். பறவையினங்களில் வேகமாக ஓடும் பறவை இதுதான். மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் ஓடும். நெருப்புக்கோழி தொடர்பான உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு தென் ஆப்ரிக்கா. நீண்ட கழுத்து, பெரிய கண்கள் உடையது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us