சில சினிமா பிரபலங்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் முதல்வர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் முதல்வராகப் பதவியேற்ற பின்பு திரையுலகினர் பலரும் அவரை சந்தித்துப் பேசி வருகிறார்கள். தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் என பலர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.
அதேசமயம் சில இயக்குனர்களை அவர் தனிப்பட்ட முறையில் வீட்டில் சந்திக்கிறார். நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். அதன் பின் இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் சிபிராஜ், நடிகர் அர்ஜுன், ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
விஜய்க்கு சரியானதொரு அரசியல் படமாக 'சர்க்கார்' படத்தைக் கொடுத்த ஏஆர் முருகதாஸ் தற்போது விஜய்யை சந்தித்துள்ளார். இன்னும் சில முக்கிய சினிமா பிரபலங்களும் விஜய்யை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்களாம்.
கடந்த சில நாட்களாக மின்சார வெட்டு, சிறுமி மரணம், பெண் மரணம் என பல சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் முதல்வரின் இந்த சந்திப்புகளும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.