Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

rasi

மேஷம்மேன்மையான எண்ணங்களை கொண்ட மேஷ ராசி அன்பர்களே! (60/100)
 
துர்முகி ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் வக்கிரம் அடைந்து 5-ம் இடமான சிம்மத்தில் உள்ளார். அவர் குடும்பத்தில் குதுõகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை, குழந்தை பாக்கியம் கிடைக்கும். அவர் ஆக. 2ல் கன்னி ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் மனதில் தளர்ச்சி ஏற்படலாம். இதற்காக கவலை கொள்ள வேண்டாம். குரு பகவான்  ஸ்தான பலம் சாதகமாக இல்லாவிட்டாலும், அவரது 9-ம் இடத்துப் பார்வையால் உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனால் எந்த இடையூறையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களை அறியாமலேயே உங்கள் ஆற்றல் வெளிப்படும்.  இதமான மனநிலையால் எதையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். 5ம் இடத்தில் இருக்கும் ராகுவால் மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம்.

அதே நேரம் 11ம் இடத்தில் இருக்கும் கேது நல்ல வளத்தையும், ஆரோக்கியத்தையும், குடும்பத்தில் மேன்மை, எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் ஆகியவற்றைக் கொடுப்பார். 8ம் இடத்தில் இருக்கும் சனி பகவானால் உறவினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படலாம். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். மொத்தத்தில் இவ்வாண்டு பொருளாதார வளம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிக்கலாம். எடுத்த செயலை துரிதமாக முடித்து வெற்றி காண்பீர்கள். மதிப்பு, மரியாதை, கவுரவம் மேம்படும். ராகுவால் கணவன்-மனைவி இடையே சிறு சிறு பிணக்குகள் வரலாம்  என்பதால், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். அலைச்சல் அதிகரிக்கும். தொழில்  ரீதியாக வெளியூர் பயணம் அல்லது குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்.

சிலருக்கு துõரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். புதிய நண்பர்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக.2க்குள் புதிய வீடு, சொத்து வாங்கலாம். குடும்பத்தோடு புண்ணியத்தலங்களுக்கு சென்று வரலாம். ஞானிகளின் ஆசியும் ஆதரவும் குடும்பத்துக்கு கிடைக்கும். சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டு கொடுத்தும் சென்றால் வெற்றி உங்கள் பக்கமே.

பணியாளர்கள் முன்னேற்ற பாதையில் செல்லலாம். உங்கள் ஆற்றல் மேம்பட்டு உயர்ந்த பதவி கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். ஆகஸ்ட்2-ந் தேதிக்கு பிறகு அதிக முயற்சி செய்தே கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.

தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். நிறுவனத்தை விரிவுபடுத்தலாம். போட்டியாளர்களின்இடையூறு அவ்வப்போது வரும். ஆனால் அதை முறியடித்து, இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி விடுவீர்கள். ஆக.1க்கு பிறகு வீண் செலவை குறைக்கவும். யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் வளர் முகமாகவே இருப்பர்.

மாணவர்களுக்கு பாடங்கள் எளிதில் புரியும். ஆக.2க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும்.

விவசாயிகள் நல்ல வளத்தோடு காணப்படுகிறீர்கள். நெல், கோதுமை, கேழ்வரகு, கடலை மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல மகசூலை தரும். புதிய சொத்து வாங்க வாய்ப்பு உண்டு.

பெண்கள் பணவரவில் திருப்திகரமாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிறந்த வீட்டிலிருந்து பொன் பொருள் வந்து சேரும். உடல்நலம் சிறப்படையும்.

2017 ஜனவரி 16 - ஏப்ரல்13 குரு பகவான், கேது சாதகமான இடத்தில் இருக்கும் காலம் இது. குரு ஜன.16ல் துலாம் ராசிக்கு அதிசாரம் (முன்னோக்கி செல்லுதல்) அடைகிறார். அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும்.

பணியாளர்களுக்கு உயர்வை தருவார். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்த  பிற்போக்கான நிலை மாறி, முன்னேற்றம் ஏற்படும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் சீராகி, மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். செய்யும் பணியிலும் மேம்பாடு காணலாம். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி  இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் வெற்றி அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். அரசு வகையில் உதவி  கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.

கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும்.

அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர்.

மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும்.

விவசாயிகள் வளர்ச்சி காண்பர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு  விவகாரங்கள் சாதகமாக  இருக்கும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். கேதுவால் உடல் நலம் சிறப்படையும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவரை வணங்கலாம். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யலாம். டிசம்பர் வரை வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நன்மை தரும். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பத்ரகாளியை வழிபடுங்கள்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us