Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய மாத ராசி பலன்

rasi

தனுசு

மூலம்
தெளிந்த சிந்தனையும், வாழ்வின் போக்கும் தெரிந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதம். ஞான மோட்சக் காரகன் கேது பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருள் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். மனதில் இருந்த சங்கடம் விலகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் எதிர்பார்த்த மாற்றங்களை ஏற்படுத்துவார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் சிலர் தங்கள் வெளியூரில் தொழிலை விரிவுபடுத்துவர். சிலர் வசிக்கும் ஊரை விட்டு வேலையின் காரணமாக வெளியூரில் குடியேறுவர். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நண்பர்களால் ஆதாயம் கூடும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். ஜூன் 29 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேரும். வீட்டிற்காக நவீன பொருட்கள் வாங்குவீர்கள். வரவு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 27, 28.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 21, 25, 30. ஜூலை 3, 7, 12.
பரிகாரம்: ஐயப்பனை வழிபட நன்மைகள் நடந்தேறும்.

பூராடம்
முன்னேற்றத்தை நோக்கி வெற்றி நடைபோடும் உங்களுக்கு ஆனி யோகமான மாதம். முயற்சி ஸ்தானத்தில் ராசிநாதன் குருவின் பார்வையுடன் சனி, ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியம் நடந்தேறும். தடைபட்ட முயற்சிகள் முடிவிற்கு வரும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்திற்கும் ஜென்ம ராசிக்கும் குருபார்வை உண்டாவதால் பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் வெளிப்படும். இத்தனை நாட்களும் உங்களை ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் உயர்வாக பார்க்கும் நிலை உருவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். மண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் மறுமண வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை புதன் சாதகமாக இருப்பதால் வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். எதிர்பார்த்த பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 28, 29.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30. ஜூலை 3, 6, 12, 15.
பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

உத்திராடம் 1 ம் பாதம்
உயர்வை நோக்கி நடை போட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் ஆனி நன்மையான மாதம். உங்கள் நட்சத்திராதிபதியும், ராசியாதிபதியும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். நினைத்த வேலைகள் நடந்தேறும். இதுவரை இருந்த பிரச்னைகள், சங்கடங்கள் முடிவிற்கு வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இருந்த இடைவெளி விலகும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வராமல் இருந்த பணம் கைக்கு வரும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், ராகுவும் உங்கள் செயல்களை லாபமாக்குவர். எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவர். இந்த மாதம் உங்களுக்கு பெரிய யோகமானதாக இருக்கும். நெருக்கடி விலகும். சேமிப்பு உயரும். தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். முதியவர்களுக்கு உடல்நிலையிலும், மன நிலையிலும் இருந்த சங்கடம் விலகும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 29.
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 21, 28, 30. ஜூலை 1, 3, 10, 12.
பரிகாரம்: சிவபெருமானை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us