sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/துலாம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

மாத ராசி பலன் : துலாம்
13 மே 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

துலாம்

துலாம்: சித்திரை 3, 4 ம் பாதம்

உழைப்பால் உண்டாகும் வெற்றியே நிரந்தரமானது என்பதை அறிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். தைரியகாரகன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். மற்றவர்களால் முடிக்க முடியாத வேலைகளையும் முடித்துக் காட்டுவீர். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சகோதரர்களுடைய ஆதரவு கிடைக்கும். குடும்பம், தொழில், வாழ்க்கையில் இருந்த பிரச்னை முடியும். சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் முதலீடுகளில் கவனம் தேவை. புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத சங்கடம் ஏற்படும். தலைமைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். உடல் நிலையிலும் அவ்வப்போது பிரச்னை தலை எடுக்கும். எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் சிறு  தவறுக்கு கூட இடம் கொடுக்க வேண்டாம். இந்த நேரத்தில், குரு சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். திருமணம் கூடும். நட்புகளால் லாபம் ஏற்படும். செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு கல்விக்கனவு நனவாகும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். தம்பதிக்கிடையே இணக்கம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மே 17, ஜூன் 13.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன் 6, 9.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடம் நீங்கும்.

சுவாதி: புகழோடும் பொருளோடும் வாழ்வதே வாழ்க்கை என்ற முடிவோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், மார்ச் 26 வரை குரு பார்வை இருப்பதால் மனக்குழப்பம் விலகும். எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியெல்லாம் வெற்றியாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை பாக்யத்திற்காக தவம் இருந்தவர்களுக்கு வரம் கிடைத்தது போல் நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் வீடுதேடி வரக்கூடிய நிலை உருவாகும். ஜூன் 10 வரை அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு வசதிகள் வசதியும் வாய்ப்பும் உண்டாகும். சமூகத்தில் தனி மரியாதை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். தனியார் நிறுவனங்களில் வேலைப்பார்ப்பவர்களுக்கு வேலையை விட்டு விட்டு புதிய வேலையில் சேர்வீர். வெளிநாட்டு விவகாரங்களில் ஏற்பட்ட தடை விலகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். தொழிலாளர் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் தொழில் லாபம் தரும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதிக்குள் இருந்த இடைவெளி விலகும். லாப கேதுவால் சேமிப்பு உயரும். மாணவர்களின் கல்வி கனவு நனவாகும். கவனமாக செயல்படும் விவசாயிகளுக்கு நெருக்கடி நீங்கும். வயதானவர்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும்.
சந்திராஷ்டமம்: மே 17, 18. ஜூன் 13, 14.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 22, 24, 31. ஜூன் 4, 6, 13.
பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதம்: அறிவாற்றலால் அனைத்திலும் வெற்றிபெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். மே 26 வரை பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நேற்று வரை அலட்சியமாகப் பார்த்தவர்களும் மரியாதையோடு பார்த்திடக்கூடிய நிலை உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். பொன் பொருள் சேரும். அடமானத்தில் இருந்த நகைகளை மீட்பீர்கள். கையில் பணப்பழக்கம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். தலைமையின் ஆதரவு ஏற்படும். சத்ரு ஜெய ஸ்தானத்தை சஞ்சரிக்கும் சனிபகவான் முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். தைரியம் தன்னம்பிக்கை வேகம் அதிகரிக்கும். உடலில் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரம் தொழிலில் போட்டியாளரின் தொல்லை நீங்கும். வழக்கு சாதகமாகும். மறைந்த புதன் நிறைந்த செல்வங்களைக் கொடுப்பார். உபரி வருமானம் ஏற்படும். வராமல் இருந்த பணம் வரும். பங்குச்சந்தையில் ஆதாயம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை உண்டாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: மே 18. ஜூன் 14.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30. ஜூன் 3, 6, 12.
பரிகாரம்
செந்தில் வேலனை வழிபட சங்கடம் விலகும். வாழ்க்கை வளமாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us