Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/மாத ராசி பலன்/சிம்மம்

முந்தய மாத ராசி பலன்

rasi

சிம்மம்மகம்: ஞான மோட்சக் காரகனான கேது, ஆத்ம காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள் அனைத்திலும் மேன்மை மிக்கவர்களாக இருப்பீர்கள். பிறக்கும் ஆனி மாதம் உங்களுக்கு நன்மையான மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். 7ம் இடத்தில் சஞ்சரித்து சங்கடங்களை வழங்கிய சனி,
ஜூன் 19 ல் வக்ரமடைவதால் உங்கள் நிலையில் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தைரியமாக செயல்படத் தொடங்குவீர்கள். குருவின் பார்வை 2, 4, 6ம் இடங்களில் பதிவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். மனதில் சந்தோஷம் நிறையும். எதிர்ப்புகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். கடந்த கால சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகள் தங்கள் செயலில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களின் விருப்பம் நிறைவேறும். கணவன், மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 29, 30
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 19, 25, 28. ஜூலை 1, 7, 10
பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் நன்மை கூடும்.

பூரம்: ஒளிக்காரகனான சூரியன், அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்ற மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் மாதம் முழுவதும் நன்மை வழங்க இருப்பதால் பொருளாதார நெருக்கடி விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். பணம் பலவழியிலும் வர ஆரம்பிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வையால் குடும்பத்தில் இருந்து நெருக்கடிகள் விலகி ஒற்றுமை உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரி தொல்லைகள் விலக ஆரம்பிக்கும் இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். 7 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்ரமடைவதால் உங்களுக்குண்டான நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் லாபத்தை அடையலாம். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். கூட்டுத்தொழிலில் இருந்த சங்கடங்கள் மறையும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர். மாணவர்கள் மேற்படிப்பு கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 1
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28. ஜூலை 6, 10, 15
பரிகாரம்: சனிக்கிழமையில் நவக்கிரகத்தை வழிபட நன்மை உண்டாகும்.

உத்திரம் 1 ம் பாதம்: ஆத்ம காரகனான சூரியனின் நட்சத்திரத்திலும் ராசியிலும் பிறந்து, சக்தி மிக்கவராக விளங்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாக இருக்கும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடி விலகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். அரசு வழியிலான முயற்சி ஆதாயம் தரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். அந்நியரால் சங்கடம் தோன்றும் என்றாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரித்தாலும் குருவின் பார்வை பதிவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். அரசியல்வாதிகளுக்கு இம்மாதம் யோகமான மாதமாக இருக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்ததை நினைத்தபடி நடத்திக் கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்த நெருக்கடி விலகும். 7 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்ரமடைவதால் நிம்மதியான நிலை ஏற்படும். புதிய முயற்சிகளில் மட்டும் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 2
அதிர்ஷ்ட நாள்: 19, 28, ஜூலை 10
பரிகாரம்: மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டால் நன்மை சேரும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us