Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/மீனம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

மாத ராசி பலன் : மீனம்
11 பிப் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

மீனம்

பூரட்டாதி 4 ம் பாதம்
எந்த ஒன்றாக இருந்தாலும் அதில் சிந்தித்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிநாதன் குரு பகவான் சுக ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் நிதானம் தேவை. விரய ஸ்தானத்தில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கையில் இருக்கும் பணம் கரையும். சிலருக்கு உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்படும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மையாகும். புதிய முதலீடுகளிலும் நிதானம் வேண்டும். பிறரை நம்பி எந்த வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் சப்தமாதிபதி புதனும் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் பிப். 20 முதல் வக்கிரம் அடைவதால் பண விவகாரங்களில் கவனம் தேவை. உங்கள் அவசரத் தேவைக்காக கடன் வாங்கும்போது வெற்று காசோலை, பிராம்சரி நோட்டு வழங்குவதை தவிர்க்கவும். வட்டி விவகாரங்களில் நன்றாகப் பேசி தீர்த்துக் கொள்வது நன்மையாகும். பொதுவாக இந்த நேரத்தில் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை கேட்பதும் நன்மையை உண்டாக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 7.
அதிர்ஷ்ட நாள்: பிப். 21. மார்ச் 3, 12.
பரிகாரம்
கல்யாண ஜகந்நாதனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

உத்திரட்டாதி
கர்மக்காரகனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். மார்ச். 6 வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை ஏற்படுத்துவார். மனதில் நிம்மதியற்ற நிலையினை உண்டாக்குவார். மார்ச். 6 முதல் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி நிதானமற்ற போக்கினை உங்களுக்கு ஏற்படுத்துவார். திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாக வேண்டிவரும். சனி பகவானின் பார்வை நட்பு ஸ்தானத்திற்கு உண்டாவதால் உடனிருந்த நண்பர்களும் உங்களைவிட்டு செல்வர். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். மேல் அதிகாரியால் நெருக்கடி தோன்றும். தொழிலில் கூடுதல் கவனம் தேவை என்றாலும், பிப். 21 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயும், மாதம் முழுவதும் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்களுக்கு வரும் நெருக்கடிகளை இல்லாமல் செய்வார்கள். தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போனதுபோல் சங்கடங்கள் எல்லாம் விலகும். உடல்நலம் மேம்படும். வம்பு, வழக்கு, எதிர்ப்பு என்றிருந்த நிலை மாறும். எதிர்பார்த்த பணம் வரும். படிப்பில் கவனம் செலுத்துவது நன்மையாகும். முடிந்தவரை இந்த மாதத்தில் வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 
சந்திராஷ்டமம்: மார்ச் 7, 8.
அதிர்ஷ்ட நாள்: பிப். 17, 21, 26. மார்ச் 3, 12.
பரிகாரம்
தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.

ரேவதி
புத்தி சாதுரியத்துடன் பிறருக்கு வழிகாட்டும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். வித்யா காரகன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், பிப். 20 முதல் வக்கிரமடைவதால் பண விவகாரங்களில் எச்சரிக்கைத் தேவை. உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும் பிப். 21 வரை உங்கள் தனாதிபதியும், பாக்யாதிபதியுமான செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாதம் முழுவதும் சூரியன், ராகு, புதன், பிப். 22 முதல் செவ்வாய் என்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு, செலவில் கவனம் தேவை. பணப் பொறுப்பில் இருப்பவர்களும், வெளியூருக்கு பணத்துடன் செல்பவர்களும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பணியாளர்கள் மேல் அதிகாரியின் ஆலோசனையை ஏற்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக்கொள்வதால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 8, 9.
அதிர்ஷ்ட நாள்: பிப். 14, 21, 23. மார்ச் 3, 5, 12, 14.
பரிகாரம்
ஸ்ரீநிவாசனை வழிபட வாழ்வில் வளம் கூடும். நன்மை உண்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap