Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கன்னி

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

மாத ராசி பலன் : கன்னி
13 மே 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

கன்னி

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்

நிதானமாக செயல்பட்டாலும் நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். உங்கள் விரயாதிபதி சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மன பயம் ஏற்படும். வேலைகளில் குழப்பம் உண்டாகும். வேலையில் இருப்பவர்களுக்கு அதிகாரியால் நெருக்கடி தோன்றும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். மே 26 வரை குரு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை. உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வதால் சங்கடம் ஏற்படாமல் போகும். அதே நேரத்தில் குருவின் பார்வை 2,4,6 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி நிலைக்கும். எதிர்ப்பு பகை போட்டி பிரச்சனை என்பதெல்லாம் இல்லாமல் போகும். செல்வாக்கு அதிகரிக்கும். பெண்கள் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைப் பார்க்கும் இடத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது அவசியம். பெரியோரின் ஆலோசனை இந்த நேரத்தில் கை கொடுக்கும். 
ஜூன் 10 வரை சுக்கிரன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் செலவு அதிகரிக்கும். ஆடம்பரமாக செலவு செய்து சங்கடப்பட வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும் என்பதால், வரவு செலவில் நிதானம் தேவை. விவசாயிகள் யோசித்து செயல்படுவது நல்லது.  உழைப்பாளர்கள் வேலை பார்க்கும் இடத்தில் அனுசரித்துப்போவது அவசியம். மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
சந்திராஷ்டமம்: மே 15, ஜூன் 11.
அதிர்ஷ்ட நாள்: மே 19, 23, 28. ஜூன் 1, 5, 10, 14.

பரிகாரம்: சனீச்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.

அஸ்தம்: என்ன தான் திறமை இருந்தாலும் அடிக்கடி தேவையற்ற குழப்பத்திற்கு ஆளாகி விடும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் எடுக்கும் வேலைகளில் லாபம் காணும் மாதம். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு முயற்சிகளை வெற்றியாக்குவார். ஆரோக்கியத்தை சீராக்குவார். எதிர்ப்பு வம்பு வழக்கு போட்டி பிரச்னை என்பதை எல்லாம் இல்லாமல் செய்வார். மே 26 முதல் குரு லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால், எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். குழப்பம் விலகி தெளிவாக செயல்படுவீர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கண்டக சனி பகவானுக்கு குரு பார்வை கிடைப்பதால் நட்பு வட்டத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிகளுக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட பிரச்னை முடியும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். மே 27 முதல் ராசி நாதன் புதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.
சந்திராஷ்டமம்: மே 15, 16. ஜூன் 12.
அதிர்ஷ்ட நாள்: மே 20, 23, 29. ஜூன் 2, 5, 11, 14.
பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

சித்திரை 1, 2 ம் பாதம்: தைரியமாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். அஷ்டமாதிபதி செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வாய்ப்பு தேடி வரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி நிறைவேறும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். மே 26 முதல் லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால், கண்டக சனியினால் ஏற்படும் சங்கடம் நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும் கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடியும். 6 ம் இட ராகுவும், மே 27 முதல் 10ல் இடத்தில் சஞ்சரிக்கும் புதனும், லாப குருவும் உங்கள் வாழ்க்கையை வளமாகும். நீங்களே அதிசயப்படும் வகையில் உங்கள் நிலை மாறும். பொருளாதார நெருக்கடி நீங்கும். செய்து வரும் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அனுகூலமான நிலை இருக்கும். அரசியல்வாதிகள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகளும் விவசாயிகளும் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். புதிய முதலீடுகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: மே 16, ஜூன் 12, 13.
அதிர்ஷ்ட நாள்: மே 18, 23, 27. ஜூன் 5, 9, 14.
பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் விலகும். நன்மை ஏற்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap