Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/மாத ராசி பலன்/கடகம்

மாத ராசி பலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

மாத ராசி பலன் : கடகம்
13 மார் 2026

முந்தைய மாத ராசி பலன்

rasi

கடகம்

புனர்பூசம் 4 ம் பாதம்

சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். விரய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரித்துவரும் குரு பகவான் மார்ச் 17 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால், உங்கள் தேவைகளுக்காகவும், ஆடம்பரமாக வாழ்வதற்காகவும் கையிருப்பு கரையும். குடும்பத்திலிருந்த நெருக்கடிகள் விலகும். நிம்மதியாக தூங்க முடியவில்லை என்று வருத்தப்பட்டு வந்தநிலை மாறும். தாயாரின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கூடும். எடுக்கும் வேலைகளில் வெற்றியும் எதிர்பார்த்த ஆதாயமும் உண்டாகும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் வாசலுக்கு வந்ததுபோல் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் தன, குடும்பாதிபதி சூரியன் மாதம் முழுவதும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். பொது வாழ்க்கையில், அரசியலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை கிடைக்காமல் இருந்த பொறுப்பும் பதவியும் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படும் வேலைகள் ஆதாயம் தரும். விஐபிகள் ஆதரவும் இந்த மாதத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வியாபாரிகளுக்கு அரசு வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். விவசாயிகள் மாதத்தின் முற்பகுதியில் விளைச்சலில் கவனமாக இருக்க வேண்டும். வயதானவர்களுக்கு ஆரோக்யம் சீராகும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 16, ஏப். 13.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 21, 29, 30. ஏப். 2, 3, 11, 12.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

பூசம்

நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாகும். இரண்டரை ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து நெருக்கடிக்குமேல் நெருக்கடிகளை உங்களுக்கு கொடுத்துவந்த சனி பகவான்,  பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரை ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் முன்னேற்றமான நிலை உண்டாகும். சமூகத்தில் உங்களுக்கென்று தனி மரியாதை உருவாகும். இழுபறியாக இருந்த வழக்குகள், வேலைகள் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சந்தித்த மெமோ, இடைநீக்கம் போன்ற சங்கடங்கள் முடிவிற்கு வரும்.  எதிர்பார்த்த இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். சகோதரர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவும் தொண்டர்கள் பலமும் கூடும். தேர்தலில் போட்டியிடுவதற்கும் சிலருக்கு வாய்ப்புக் கிடைக்கும். பண வரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். சனி பகவான் ஒரே நேரத்தில் நான்கு வழிகளில் இக்காலத்தில் நன்மைகளை வழங்கிட இருப்பதால், உங்களை இதுவரை உதாசீனம் செய்து வந்தவர்களும் உயர்ந்து பார்க்கும் நிலை ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு எதிர்காலத்தின் மீது அக்கறை உண்டாகும். அதனால் படிப்பில் ஆர்வம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 17. ஏப். 13.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 26, 29. ஏப். 2, 8, 11.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் நவக்கிரகத்திற்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற நன்மை உண்டாகும்.

ஆயில்யம்

எந்த ஒன்றிலும் நிதானமாகவும் யோசித்தும் செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஏப். 6 வரை புத பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் மனம் தெளிவாகும். அறிவாற்றல் வெளிப்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். மறைந்த புதன் நிறைந்த செல்வங்களை தருவார் என்ற வார்த்தைக்கேற்ப இக்காலத்தில் ஷேர் மார்க்கெட் உயர்வதுபோல் உங்கள் பொருளாதார நிலை உயரும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். திரும்ப வரவே வராது என்று முடிவு செய்து கை விட்ட பணமும் வரும். வியாபாரிகளுக்கு இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன் தொல்லையால் ஏற்பட்ட பிரச்னை தீரும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். இந்த நேரத்தில் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். இதுநாள்வரை மற்றவர்கள் பார்வைக்கு சாதாரணமானவராக இருந்த உங்கள் நிலை இந்த மாதம் முதல் உயர ஆரம்பிக்கும். குரு பகவானின் பார்வைகள் சுக ஸ்தானத்திற்கும், சத்ரு ஜெய ஸ்தானத்திற்கும், அஷ்டம ஸ்தானத்திற்கும் கிடைப்பதால் மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதாக கண்ட கனவுகள் நனவாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். சந்தோஷமாக வாழ்ந்திடக் கூடிய அளவிற்கு எல்லாம் சாதகமாகும். சிலர் செலவுகள் வழியே நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். வீட்டிலும், வேலைப்பார்க்கும் இடத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்வி பற்றிய எண்ணத்துடன் பொதுத்தேர்வை எதிர்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: மார்ச் 18.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 23, 29. ஏப். 2, 5, 11.

பரிகாரம்: நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் மாத ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap