/ஆன்மிகம்/சத்குருவின் ஆனந்த அலை/காதல் முறிவிலிருந்து எவ்வாறு மீள்வது?காதல் முறிவிலிருந்து எவ்வாறு மீள்வது?
காதல் முறிவிலிருந்து எவ்வாறு மீள்வது?
காதல் முறிவிலிருந்து எவ்வாறு மீள்வது?
காதல் முறிவிலிருந்து எவ்வாறு மீள்வது?

கேள்வியாளர்:
சத்குரு, காதல் முறிவை எவ்வாறு கடந்து செல்வது?
சத்குரு:
உங்களது உடலுக்கு மிகப்பிரமாண்டமான அளவுக்கு ஞாபகப்பதிவு உள்ளது. இந்தப் பதிவானது பல்வேறு நிலைகளில் உள்ளது. பரிமாண ஞாபகப்பதிவு மரபணுப்பதிவு, கர்மப்பதிவு, தன்னுணர்வான மற்றும் தன்னுணர்வற்ற நிலைகளின் பதிவுகள், தெளிவான மற்றும் தெளிவற்ற நிலைகளின் பதிவுகள் என்று பல ஞாபகப்பதிவுகள் உண்டு. உங்கள் முப்பாட்டன் எவ்வாறு இருந்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாது, ஆனால் அவரின் மூக்கு உங்கள் முகத்தில் உள்ளது. எனவே தெளிவாக உங்களது உடல் மிகச்சிக்கலான ஞாபகப்பதிவின் செயல்பாட்டைக் கொண்டுள்ளது.உங்களுடைய உடல் இத்தகைய சிக்கலான ஞாபகப்பதிவை உணரும் திறனைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் தொட்டு, உணர்ந்து, தொடர்பு கொள்வது என்னவாக இருந்தாலும், அதைப் பற்றிய ஞாபகப்பதிவைச் சேகரிக்காது என்று எண்ணுகிறீர்களா? அது எண்ணற்ற அளவிலான பதிவைச் சேகரித்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதும் சுலபமான ஒன்றாக தோன்றுகிறது. ஆனால் அது மிகச் சிக்கலானது. உங்களது உடல் ஞாபகம் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் இவ்வளவு சுலபமாக அதனால் மேலே ஏறவும் கீழே இறங்கவும் முடியாது. இன்றைக்கு, தசை நினைவு என்பதைப் பற்றி விளையாட்டு நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் - அதாவது, ஒரு குறிப்பிட்ட நிலையிலான திறனுடன் அந்த விளையாட்டு விளையாடப்படும் வண்ணம் அவர்களின் உடலமைப்பில் ஞாபகப் பதிவை உருவாக்குகிறது. இது விளையாட்டுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட செயலுக்கோ மட்டும் அல்ல; ஒவ்வொரு நாளும் நீங்கள் அளவற்ற ஞாபகங்களை கிரகித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த ஞாபகப் பதிவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான இணக்கம் இருந்தால் அது ஆக்கப்பூர்வமாக இருக்கும். இந்தப் பதிவுகளுக்கு ஒரு விதமான குழப்பமான உணர்வு இருந்தால், அப்போது உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருக்கலாம், ஆனால் இந்த பதிவு உங்களுக்கு எதிராக வேலை செய்யும். ஏனெனில் அது தனக்குள் ஒன்றுக்கொன்று முரணாகவும், எதிராகவும் இருக்கிறது.