Dinamalar-Logo
Dinamalar Logo


தீர்வு

தீர்வு

தீர்வு

ADDED : ஜன 01, 2025 01:14 PM


Google News
அப்துலின் முகத்தில் அளவுக்கு மீறிய சோகம். துள்ளும் வயதில், பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டிய நேரத்தில் இதென்ன... பக்கத்து வீட்டுப் பெரியவருக்கு மனம் பொறுக்கவில்லை.

''தம்பி. இப்ப தானே இந்த வீட்டுக்கு குடிவந்தீங்க. ஏதாச்சும் வீட்டில் பிரச்னையா'' எனக் கேட்டார்.

''நான் சிறுவனாக இருந்த போதே தந்தையார் இறந்தார். மூத்தவன் நான் என்பதால் குடும்பப் பொறுப்பு என் தோளில் சுமக்க தொடங்கினேன். சரியான வேலையும் அமையவில்லை. கடன் பிரச்னை. எப்படி மகிழ்ச்சியாக இருப்பேன்''

'' எல்லோரின் வாழ்விலும் துன்பங்கள் இருக்கிறது. அதைக் கண்டு சோர்ந்து விடாதே. ஐந்து வேளை தொழுகை செய்கிறாயா'' எனக் கேட்டதற்கு, ''ஆம்'' என்றான்.

''நல்லது. நான் சொல்வதைக் கேள். 'இறைவனே! துன்பத்தில் இருந்து என்னை காப்பாயாக. ஆதரவற்ற நிலையில் இருந்தும், கடன் சுமையில் இருந்து மீட்பாயாக' என காலை, மாலையில் தொழுகைக்கு பிறகு இதை விடாமல் ஓது. பின் அவன் மீது பாரத்தைப் வைத்து விட்டு செயல்படு. இறையருளால் தீர்வு கிடைக்கும்'' என்றார் பெரியவர்.

நம்பிக்கையுடன் செய்யும் தொழுகை வீண் போவதில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us