ADDED : டிச 26, 2024 11:04 AM
நண்பர்களான அமீர், நசீர் இசையார்வம் கொண்டவர்கள். ஏழ்மை நிலையிலும் இசைக் கருவிகளை வாங்கி பயிற்சி செய்தனர். பின் இசைக்குழுவில் சேர்ந்து இசைக்க ஆரம்பித்தனர். கூட்டமும் கூடியது. பணமும் சேர்ந்தது. இப்படியாக வாழ்க்கை நகர்ந்தது.
ஒருநாள் அவர்கள் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தனர். குறிப்பிட்ட அந்த நாளில் அடை மழை பெய்தது. நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் எனக் கூறினான் அமீர். ''நிகழ்ச்சியை நடத்தியே ஆக வேண்டும். மழையை பொருட்படுத்தாமல் ஒரு ரசிகராவது வரக்கூடும். அவர் ஏமாந்து போகக்கூடாது'' என்றான் நசீர். இசை நிகழ்ச்சி தொடங்கியது.
யாரும் வரவில்லை. ஆனாலும் நிகழ்ச்சி நடந்தது. கடைசியில் இரண்டு ரசிகர்கள் மேடையை நோக்கி ஓடி வந்தனர். ''நாங்கள் காரில் அமர்ந்தபடியே இசை நிகழ்ச்சியை ரசித்தோம்'' என தங்க நாணயம் ஒன்றை பரிசளித்துச் சென்றனர். நட்சத்திரமாக மிளிரச் செய்யும் நம்பிக்கை.