ADDED : டிச 20, 2024 10:45 AM

ஒருநாள் இரவு பசியால் வாடும் ஒரு மனிதரைக் கண்டார் நபிகள்நாயகம். வீட்டிற்கு ஆள் அனுப்பி உணவிருக்கிறதா எனக் கேட்கச் சொன்னார். இல்லை என பதில் வந்தது. அருகில் நின்ற தோழரிடம், ''இவருக்கு உணவு தருவீர்களா” எனக் கேட்டார். தோழரும் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவியிடம் விஷயத்தைக் கூறினார்.
''திடீரென கேட்டால் என்ன செய்வது... குழந்தைகளுக்கு மட்டுமே உணவு உள்ளது'' என்றாள் மனைவி.
''சரி... குழந்தைகளிடம் பேசி சமாதானம் செய்வோம். பசியால் வாடுபவர் மீது இரக்கப்பட்டு உணவு தருவது நம் கடமை'' என்றார். மனைவியும் ஏற்று உணவிட்டாள். பசி நீங்கிய அந்த நபரின் வயிறு வாழ்த்தியது.