ADDED : டிச 13, 2024 08:09 AM

கலைப்பொருள் மீது ஆசை கொண்ட மன்னர் பளிங்குச் சிலைகளை வெளிநாட்டில் இருந்து வரவழைத்தார். ஒருநாள் பணியாளரின் கவனக்குறைவால் சிலை உடைந்தது.
முதலில் பணியாளரை நாடு கடத்தச் சொன்னார் மன்னர். இருந்தாலும் கோபம் அடங்காததால் உடனே துாக்குதண்டனை விதித்தார். அந்நேரத்தில் அங்கு வந்த சூபி ஞானி நடந்ததை கேள்விப்பட்டார். மன்னருக்கு தக்க பாடம் புகட்ட மீதியுள்ள சிலைகளை தள்ளிவிட்டார். இதைப் பார்த்ததும் இன்னும் கோபமடைந்த மன்னர், ''ஞானியே! உம்மை என்ன செய்கிறேன் பார்'' எனக் கத்தினார்.
''நீங்கள் செய்வது தவறு. அழியும் பொருள் மீதுள்ள ஆசை உங்களின் கண்களை மறைக்கிறது. இதற்காக ஒரு உயிரை கொல்லவும் துணிந்து விட்டீர்கள்'' என்றார்.
தவறை உணர்ந்த மன்னர் துாக்குத் தண்டனை வேண்டாம் எனத் தெரிவித்தார்.