Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/தேவை அவன் துணையே!

தேவை அவன் துணையே!

தேவை அவன் துணையே!

தேவை அவன் துணையே!

ADDED : மே 13, 2012 04:05 PM


Google News
Latest Tamil News
* இறைவன் நமக்கு மிக அருகில் இருக்கின்றான். அனைவரின் அழைப்பையும் செவியேற்கின்றான். அவனை நெருங்க எவர் துணையும் தேவையில்லை. இறைநம்பிக்கையும், நற்செயல்களுமே அவனை நெருங்கும் வழிகள்.

* இறைவன் கூறுகின்றான்: நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக் கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரிநரம்பை விடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாக இருக்கின்றோம்.

* (நபியே) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், ''நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி

சொல்கின்றேன்.

* இறைவனிடம் இவ்வாறு இறைஞ்சுங்கள்: '' எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ தான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்''.

(வேதவரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து)





      Our Apps Available On




      Dinamalar

      Follow us