Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/குழந்தைகளிடம் அன்பு

குழந்தைகளிடம் அன்பு

குழந்தைகளிடம் அன்பு

குழந்தைகளிடம் அன்பு

ADDED : ஜூன் 12, 2012 09:06 AM


Google News
Latest Tamil News
* அண்டை வீட்டார் பசியோடு இருக்க தாம் மட்டும் வயிறார உண்டு களித்துஇருப்பவன் உண்மையான மனிதனாக மாட்டான்.

* மக்களிடம் அன்பாக இருங்கள். கடுமையாக இராதீர்கள். அவர்களுக்கு ஊக்கம் அளியுங்கள்.

* சிறு குழந்தைகளிடம் அன்பு காட்டாதவனும், மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்தாதவனும் என் அன்பிற்குரியவன் அல்லன்.

* வியாபாரத்தில் உண்மை சொன்னால் அபிவிருத்தி ஏற்படும். பொய் சொன்னால் வியாபாரம் குறையும்.

* மறதி என்பது அறிவின் துரதிர்ஷ்டம். அறிவைத் தகுதியற்றவரிடம் உபயோகிப்பது அதனையே இழப்பதற்கு ஒப்பாகும்.

* சோதனையில் பொறுமையாக இருப்பவர்களும், பிழைகளை மன்னிப்பவர்களும் நேர்மையாளர்கள்.

* வயது முதிர்ந்த பெற்றோரைப் புறக்கணிக்கும் இளைஞன் எவனும் சுவர்க்கத்தை அடைய முடியாது.

* தன் பெற்றோர் தனக்குப் பிழை செய்திருப்பினும் அவர்களுக்கு நன்மையே செய்தல் வேண்டும்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us