Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/உனக்கும் கீழே உள்ளவர் கோடி

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

ADDED : ஜூன் 19, 2012 11:06 AM


Google News
Latest Tamil News
* உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்.

* உங்களை விட செல்வத்திலும், அழகிலும் சிறந்தவர்களைக் காணும்போது, அவற்றில் உங்களை விடத் தாழ்ந்தவர்களையும் எண்ணிப் பாருங்கள்.

* உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம்.

* உங்கள் செயல்கள் உங்களிடமே திருப்பி அனுப்பப்படும். அப்போது நீங்கள் பெறுகின்ற தண்டனை, நீங்களே வரவழைத்துக் கொண்டதாகும்.

* உழைத்து உண்ணும் உணவே நீங்கள் உண்ணும் உணவில் சிறந்ததாகும்.

* எண்ணத்தைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

* அறிவைத் தேடுகின்ற முயற்சியைத் தடுத்து நிறுத்துவது தீயொழுக்கமாகும்.

* கற்றவண்ணம் நடப்பவரே உண்மையில் கற்றவர்.

* நல்லமுறையில் பழகத் தெரிந்தவனும், நற்குணம் உள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவன்.

- நபிகள் நாயகம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us