
* கெட்டதை சொல்வதை விட மவுனமாக இருப்பது நல்லது. * பெற்றோரை நிந்திப்பவன் தன் பிள்ளைகளால் நிந்திக்கப்படுவான். * கல்வி கற்பது ஒவ்வொருவரின் கடமை. * ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும். * அதிகமான உணவு அறிவைக் கெடுத்து ஆரோக்கியத்தை குறைக்கும். * போதும் என்ற மனதை பெறுவதே உண்மையான செல்வம். * பாவங்களை செய்ய துாண்டுவது பேராசை. அதிலிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.