Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/மிகவும் சிறந்தது பொறுமை

மிகவும் சிறந்தது பொறுமை

மிகவும் சிறந்தது பொறுமை

மிகவும் சிறந்தது பொறுமை

ADDED : ஜூன் 21, 2013 10:06 AM


Google News
Latest Tamil News
* பிறர் மனம் நோகாத வகையில் இதமாகவும், மென்மையாகவும் பேசுங்கள். அதனால் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள்.

* பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கம் செல்ல முடியாது.

* உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம், சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம்.

* அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாத துறவியை விட சிறந்தவன்.

* கவனமுடன் செயலாற்றுங்கள். நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.

* மனம் அமைதியுடன் இருந்தால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அந்த நிலையில் தான் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும்.

* அடக்கத்துடன் வாழ்பவன் இந்த பிறவி மட்டுமில்லாமல் மறுபிறவியிலும் இன்பமுடன் வாழ்வான்.

* பிறரின் இகழ்ச்சியைக் கண்டு கோபம் கொள்ளாமலும், சண்டையிடாமலும் பொறுப்பவனே அறிஞன்.

- மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us