Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/அன்னதானம் செய்யுங்க!

அன்னதானம் செய்யுங்க!

அன்னதானம் செய்யுங்க!

அன்னதானம் செய்யுங்க!

ADDED : ஏப் 19, 2013 05:04 PM


Google News
Latest Tamil News
* உண்மை உள்ள இடத்தில் பயம் சிறிதும் இருக்காது. அதனிடம் வஞ்சம், கபடம் போன்ற எந்த கலப்படமும் இல்லை.

* உண்மை, தூய்மை, அடக்கம், அமைதி, ஒழுக்கம் போன்ற நற்குணங்களைக் கொண்டவனே அறிஞன்.

* ஒழுக்கத்தில் குறைவு நேரும்போது, அதற்காக மனம் வருந்தி அந்தக் குற்றத்தைப் போக்க முயற்சிப்பதே உயர்ந்தவர்களின் செயல்.

* அறங்களில் சிறந்தது பிறர் பசி போக்குவதே ஆகும். தம்மைச் சுற்றியிருப்போர் பசித்திருக்க, தான் மட்டும் பால் சோறு சாப்பிடக் கூடாது.

* பசு தானம், பூமி தானம், சுவர்ண (தங்கம்) தானம் அளிக்கத் தேவையில்லை. உணவை தானமாக அளித்தால் போதும்.

* செய்த குற்றத்தை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வதில் தயக்கமோ, பிடிவாதமோ கூடாது.

* பிறருக்கு உதவி செய்பவர்கள், கனி தரும் மரம் போன்றவர்கள். உதவ மனம் இல்லாதவர்கள் பூக்காத மரம் போன்றவர்கள்.

- மகாவீரர்

(இன்று மகாவீரர் ஜெயந்தி)




      Our Apps Available On




      Dinamalar

      Follow us