Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாவீரர்/நல்லவரோடு பழகுங்கள்

நல்லவரோடு பழகுங்கள்

நல்லவரோடு பழகுங்கள்

நல்லவரோடு பழகுங்கள்

ADDED : டிச 11, 2013 01:12 PM


Google News
Latest Tamil News
* நன்மை தரும் உண்மையை எப்போதும் பேசுங்கள். விரும்பியது கிடைக்காவிட்டால் மனம் தளர்ந்து விடாதீர்கள்.

* தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசியுங்கள். எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் காட்டுங்கள்.

* சந்தேகம் கொண்ட மனிதனுக்கு வாழ்வில் எப்போதும் நிம்மதி கிடைக்காது.

* கோபம், பிடிவாதம், பொறாமை, நன்றியின்மை போன்ற தீய குணங்கள் கொண்ட மனிதனை அழிவுப்பாதையில் தள்ளிவிடும்.

* துறவியாக இருந்தாலும், இல்லறத்தில் இருந்தாலும் மனிதனுக்கு நல்லொழுக்கம் மிகவும் அவசியமானது.

* நோயாளிக்குச் சேவை செய்வதில் சிறிதும் வருத்தம் கூடாது. பிறர் நன்மைக்காக பாடுபடுபவன் தனக்கும் நன்மையைத் தேடிக் கொள்கிறான்.

* எப்போதும் நல்லவர்களோடு சேர்ந்திருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

- மகாவீரர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us