Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/தேங்காய் மாதிரி மனசு!

தேங்காய் மாதிரி மனசு!

தேங்காய் மாதிரி மனசு!

தேங்காய் மாதிரி மனசு!

ADDED : டிச 01, 2013 10:12 AM


Google News
Latest Tamil News
* படித்தால் மட்டும் போதாது. பண்புடன் நடப்பது அவசியம். பண்பாடு கொண்டவனே மனிதனாக கருதத்தக்கவன்.

* நன்மையின் பாதை செல்லச் செல்ல விரிவாக இருக்கும். தீமையின் பாதையோ செல்லச் செல்ல குறுகி விடும்.

* கடவுளின் கருணையைப் பெற, வெறுமனே அவரை வழிபடுவது மட்டும் வழியல்ல. துன்பப்படும் உயிர்களிடம் கருணை காட்டுவதே கடவுளின் கருணையை நமக்குப் பெற்றுத்தரும்.

* ஒவ்வொரு முறையும் தேங்காய் உடைக்கும் போது, அது வெள்ளையாக இருப்பதைக் காண்கிறோம் இல்லையா! அதுபோல், மாசுபடும் மனதையும் வெள்ளையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பெரியவர்கள், நல்லவர்களைக் கேலி பேசுவதும், அலட்சியம் செய்வதும் தகாத செயல். இதற்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

* விளைந்த நெற்கதிர் பணிந்து தலை தாழ்வது போல, செல்வந்தர்களும் பணிவுடன் வாழ வேண்டும்.

- வாரியார்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us