Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/நமக்கு நாமே நண்பன்!

நமக்கு நாமே நண்பன்!

நமக்கு நாமே நண்பன்!

நமக்கு நாமே நண்பன்!

ADDED : மே 24, 2009 06:20 PM


Google News
Latest Tamil News
<P>* தன்னைத் தானே வென்றவன் தனக்குத் தானே நண்பன் ஆகிறான். தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவனும் ஆவான். இதனால் நமக்கான நண்பரோ, பகைவரோ வெளியுலகில் இல்லை. நாமே நமக்கு நண்பனாகவும் பகைவனாகவும் இருக்கிறோம்.<BR>* நெஞ்சில் தைரியமும், யாருக்கும் அஞ்சாத துணிவும் வேண்டும். எது நடந்தாலும் நம்மை பிறர் தாழ்வாகக் கருதவோ, கீழ்த் தரமாக நடத்தவோ நாம் இடம் தருதல் கூடாது.

<P>* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். இதனால், மனிதன் எண்ணியபடியே விரும்பிய நலன் களை அடையமுடியும். <BR>

<P>* தன்னைக் காட்டிலும் ஒரு விஷயத்தில் அறியாதவனாய் ஒருவன் இருக்கிறான் என்றால் அது இந்த நிமிஷம் வரை மட்டுமே. எப்போதுமே அறியாதவனாய் ஒருவன் இருப்பான் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்.<BR>

<P>* ஒருவன் தன்னைத் தானே ஆள வேண்டும். தன்னைத் தானே அறிய முயலவேண்டும். தன்னைத் தானே காக்க வேண்டும். தன்னைத் தானே உயர்த்தவும் வேண்டும். ஆக நமக்கான செயல்களை நாம் மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.</P>




      Our Apps Available On




      Dinamalar

      Follow us