Dinamalar-Logo
Dinamalar Logo

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பாரதியார்/தெளிவான புத்தி வேண்டும்

தெளிவான புத்தி வேண்டும்

தெளிவான புத்தி வேண்டும்

தெளிவான புத்தி வேண்டும்

ADDED : மே 26, 2009 06:12 PM

Google News
Latest Tamil News

* மனித சமுதாயத்தில் ஆயிரம் ஜாதிகள் உண்டு என்ற வஞ்சக எண்ணத்தை யாரும் இனி ஒப்புக்கொள்ளக் கூடாது. இனிமேல் ஒரே ஒரு ஜாதி தான். அது மானிட ஜாதி மட்டுமே.

* நந்தனைப் போல உயர்ந்த ஒருவர் யாரும் இந்த நாட்டில் இருந்ததில்லை. குணம் நன்றாக இருந்தால், எந்தக் குலத்தில் பிறந்தாலும் இன்பம் அடைவது உறுதி. உண்மையாய் இருப்பவர்கள் யாவரும் உயர் இன்பம் பெறுவர்.

* ஐந்து புலன்களையும் அடங்கச் செய்து அரசாட்சி செய்ய வேண்டும். புத்தியைத் தெளிவாக இருக்கும்படிச் செய்ய வேண்டும். மனம் நொந்து சலிக்காமல், நல்ல நோக்கில் செலுத்திடும் வகை கண்டால் இன்பத்தை அடையலாம்.

* உண்மையே தெய்வம். வேறு தெய்வங்கள் எல்லாம் பொய்யே. உண்மையே வேதம். மற்றவை எல்லாம் வெறும் கதையாகும். இந்த உலகத்தை ஆள்பவர் என்றாலும், சிறு வாழைப்பழக்கடை வைத்தவர் என்றாலும், உண்மை நெஞ்சில் இருக்கும் என்றால் அவர்களே மேலானவர்கள்.

* ஊருக்கு உழைப்பதே பெரிய யோகாசனம். மற்றவர்களுக்கு நன்மை செய்யும் வகையில் நம்மை வருத்திக் கொள்வதே யாகம்.

Our Apps Available On

Dinamalar

Follow us