ADDED : டிச 22, 2023 05:11 PM

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ
மறைநான்கின் அடிமுடியும் நீ
மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ
மண்டலம் இரண்டேழும் நீ
பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ
பிறவும் நீ யொருவன் நீயே
பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்றதாய் தந்தை நீயே
பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ
போதிக்க வந்த குரு நீ
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ
இந்த புவனங்களை பெற்றவனும் நீ
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகளை யார்க்குரைப்பேன்?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
திருவள்ளூர் அருகே உள்ள சிறுமணவை ஊரில் முன்னுாற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் முனுசாமி. இவரால் கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ள நடராஜர் மீது பாடப்பட்ட பாடல் இது. இதனை நடராஜ பத்து என்பர். பத்து பாடல்களிலும் ஞானம் தரக்கூடிய தேவார திருவாசக கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு நடராஜர் சன்னதி முன்பும் பாடப்பட வேண்டிய பாடல் இது.