ADDED : டிச 22, 2023 05:10 PM
கடலுார் மாவட்டம் சிதம்பரம் கோயிலில் உள்ள நடராஜப்பெருமானுக்கு பூஜை செய்யக்கூடியவர்களை தில்லை வாழ் தீட்ஷதர், தில்லை வாழ் அந்தணர் என அழைப்பர். இவர்கள் மூவாயிரம் பேர் என்பர். இவர்களுள் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார். இவர் சிவபெருமானைப்பற்றி எட்டு நுால்கள் எழுதியுள்ளார்.
அவை சித்தாந்த அட்டகம் எனப்படும். கீழ்க்கண்ட பாடல் இவரால் சிதம்பரம் சிவகாமி அம்பிகை மீது இயற்றப்பெற்றவை. இதை தொடர்ந்து அம்பிகை சன்னதி முன் படிப்பவருக்கு ஞானமும் நல்லறிவும் ஏற்படும்.
பரந்தெழுந்த சமண் முதலாம் பரசமய இருள் நீங்கச்
சிரந்தழுவு சைவ நெறித் திருநீற்றின் ஒளி விளங்க
அரந்தை கெடப் புகழியர்கோன்
அமுது செய்யத் திருமுலைப்பால்
சுரந்தளித்த சிவகாம சுந்தரி பூங்கழல் போற்றி.