ADDED : பிப் 20, 2025 02:28 PM
* சிவபக்தர்கள் விரும்பி பாடும் பாடல் 'நமச்சிவாய வாழ்க' எனத் தொடங்கும் சிவபுராணம். இது இடம் பெற்றுள்ள நுால் திருவாசகம்.
* திருவாசகம் என்பது சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு.
* இதை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது. இதில் 51 பதிகங்களில் 658 பாடல்கள் உள்ளன.
* 38 சிவத்தலங்கள் இதில் பாடப்பட்டுள்ளன.
* பக்திச் சுவையும் மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டதால் 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்பது பழமொழி.
* ஜி.யு.போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.