அகத்திய முனிவர் பல தலங்களுக்குச் சென்ற போது பாவச்சுமை காரணமாக மக்கள் துன்பப்படுவது கண்டு வருந்தினார். அவர்களைக் காப்பாற்ற விஷ்ணுவை நோக்கி தவம் புரிந்தார். குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவராக அகத்தியர் முன் எழுந்தருளினார் விஷ்ணு. அவரிடம் அகத்தியர், பாவத்தில் இருந்து மக்கள் விடுபடுவதற்கு வழி காட்டுமாறு வேண்டினார்.
அதற்கு ஹயக்ரீவர், 'ஜகன்மாதாவான பராசக்தியின் அருட்கோலமான லலிதாம்பிகையை வழிபட்டால் துன்பம் தீரும்' என்று சொல்லி, அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை (பெயர்கள்) உபதேசித்தார். அதுவே 'லலிதா சகஸ்ர நாமம்' என பெயர் பெற்றது.