Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/நன்றி சொல்லும் நாள்

நன்றி சொல்லும் நாள்

நன்றி சொல்லும் நாள்

நன்றி சொல்லும் நாள்

ADDED : அக் 09, 2024 01:54 PM


Google News
Latest Tamil News
நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி கொண்டாடப்படும். இதை தசரா என்றும் அழைப்பர்.

எருமை வடிவில் வந்த மகிஷன் என்ற அசுரனை அம்பிகை வதம் செய்த நாள் விஜயதசமி. ராமபிரான் அரக்கனான ராவணனைக் கொன்று சீதையை மீட்டதும் இன்று தான்.

பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் தனி ஆளாக விராட தேசத்தின் மீது படை எடுத்து வந்த கவுரவர்களை இந்நாளில் வென்றான். அர்ஜூனனுக்குரிய விஜயன் என்னும் பெயரால் இந்நாளை 'விஜய தசமி' என சொல்கிறோம்.

சரஸ்வதி பூஜையில் வைத்த புத்தகங்கள், தொழில் கருவிகளை விஜயதசமியான அன்று மீண்டும் வழிபட்டு பயன்படுத்த தொடங்குவர். கல்வி, பாட்டு, இசை, நடனம், மொழி கற்றல் என புதியனவற்றை பயிலத் தொடங்குவர்.

வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்வதற்கு உதவிய ஆசிரியர்கள், பெரியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள். வயதான காலத்தில் தனிமையில் நேரத்தைச் செலவிடும் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால் அது மிகையில்லை.

இந்நாளில் நம் எண்ணம், சொல், செயல்களை ஒருமைப்படுத்தி நல்வழியில் நடக்க முயற்சித்தால் எதிர்காலம் சிறக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us