ADDED : அக் 09, 2024 01:26 PM
அடையாள நாண்மலர் அங்கையில் ஏடுமணி வடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலானை யுபநிடதப்
படையாளை எவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுமே.
தாமரை மலர் போல் சிவந்த கையில் ஓலைச்சுவடியும், கழுத்தில் மணிமாலையும் அணிந்தவளே. மெல்லிய இடையைப் பெற்றவளே. உபநிஷதத்தை தன் படைக்கலமாகக் கொண்டவளே. எல்லா உயிர்களையும் படைப்பவளே. நறுமணம் மிக்க வெள்ளைத் தாமரையில் வாழ்பவளே. உன்னையன்றி வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்கிறார் கம்பர்.