பராசக்தி மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்து மகிஷாசுரனை அழித்த தலம் மைசூரு. சாமுண்டீஸ்வரி என்ற பெயர் கொண்ட இவள், பத்து முகங்களும், பத்து கால்களும், பத்து கைகளும் கொண்டவள்.
இவள் பார்ப்பதற்கு பயங்கரமானவள் என்றாலும் தாயைப் போன்ற அன்புள்ளம் கொண்டவள். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் எனக் காட்டுபவள். 16ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசர்கள் காலத்தில் ஹம்பியில் தசரா விழா நடந்தது. காலப்போக்கில் மைசூரு தசரா பிரபலமாகி விட்டது.
சாமுண்டீஸ்வரி கோயிலும், அரண்மனையும் தசராவை முன்னிட்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். பொருட்காட்சியும் நடக்கும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யானை ஊர்வலம் வருவது தான். 50க்கும் மேற்பட்ட யானைகள் செப்டம்பர் முதல் வாரத்திலேயே மைசூருக்கு வரத் துவங்கிவிடும்.
இந்த யானைகளில் எந்த யானை சாமுண்டீஸ்வரியை சுமக்கப் போகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். இந்த யானையின் மீது தங்க சிம்மாசனம் அமைத்து, அதில் சாமுண்டீஸ்வரியை எழுந்தருளச் செய்து ஊர்வலம் வருவர். இதற்காக இங்கு வரும் அனைத்து யானைகளும் பரிசோதிக்கப்பட்டு தகுந்த யானை தேர்வு செய்யப்படும். மைசூரு மகாராஜா ஊர்வலத்தை துவங்கி வைப்பார்.