ADDED : நவ 06, 2012 05:42 PM

பதஞ்சலி முனிவர் வழிபட்ட பதஞ்சலீஸ்வரர், கடலூர் மாவட்டம் முள்ளூரில் அருளுகிறார், இவ்வூரின் புராணப்பெயர் திருக்காணாட்டம்புலியூர். இவரை வழிபட்டால் ராகு, கேது சர்ப்பதோஷத்தால் உண்டாகும் திருமணத்தடை, புத்திரத்தடை நீங்கி வாழ்வில் யோகம் உண்டாகும்.
விஷ்ணுவின் பாரத்தை தாங்கமுடியாமல் ஆதிசேஷன் ஒருநாள் வருந்தியது. அதற்கான காரணத்தை கேட்டபோது விஷ்ணு,'' முன்பு ஒருசமயம் சிவனின் ஆனந்த தாண்ட வத்தைக் கண்டு மகிழ்ந்தேன். அதை நினைத்த சந்தோஷத்தில் என் உடல் பாரமாகி விட்டது,'' என்று கூறினார். இதையடுத்து ஆதிசேஷனுக்கும்சிவநடனத்தைக்காணவிருப்பம்உண்டானது.
இதற்காக, பூலோகத்தில் அத்திரி, அனுசுயா தம்பதிக்கு குழந்தையாகப் பிறந்தார். ஐந்து தலைபாம்பின் முகமும், மனிதஉருவமும் கொண்ட அவருக்கு பதஞ்சலி எனப் பெயரிட்டனர். அந்த சமயத்தில், பூலோகத்தில் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவரும் சிவநடனம் வேண்டி தில்லை வனத்தில் தவமிருந்து வந்தார். பதஞ்சலி, வியாக்ரபாதரைச் சந்தித்தார். இருவரும் தைப்பூச நன்னாளில் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தைக் கண்டு களித்தனர். இதன்பின் பதஞ்சலி முனிவர், நந்திகேஸ்வரரைச் சந்தித்தார். முக்தி பெற விரும்புவதாகவும், அதற்குரிய திருத்தலத்தைக் கூறும்படியும் வேண்டினார். காணாட்டம்புலியூர் சென்று சிவனை பூஜிக்கும்படியும், சிவனருளால் முக்தி உண்டாகும் என்றும் அவர் அருள்புரிந்தார். பதஞ்சலி இங்கு வந்து சிவனை வழிபட்டு சிவகதி பெற்றார். பதஞ்சலிக்கு அருள்புரிந்ததால் சிவன் 'பதஞ்சலீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். இவரை வழிபட்டால் ராகு, கேது சர்ப்பதோஷம் நீங்கும். தாமரை போன்ற கண்களுடன் விளங்குவதால் இங்கு அம்பிகை 'அம்புஜாட்சி' என்ற திருநாமத்துடன் விளங்குகிறாள். கோல்வளைக்கை அம்மை, காணார்குழலி என்ற பெயர்களும் உண்டு.
சித்திரை முதல்நாளில் சிவனை பூஜிக்கும் விதத்தில் சூரியன் தன் செங்கதிர்களை சுவாமியின் திருமேனியில் படரச்செய்து வழிபடுவது சிறப்பு. சூரியனின் பெயரால் இங்குள்ள தீர்த்தமும் 'சூரிய புஷ்கரணி' எனப்படுகிறது. சூரியனுக்குரிய வெள்ளெருக்கு இத்தல விருட்சமாக உள்ளது. ஜாதகத்தில் சூரியதசை, சூரியபுத்தி நடப்பில் உள்ளவர்கள் ஞாயிறன்று வழிபட்டால் நன்மை அரசுவகையில் அனுகூலபலன் உண்டாகும். சிவனின் நண்பரான சுந்தரர் கொள்ளிடக்கரைப் பகுதிக்கு வந்தபோது இத்தல சிவன் காட்சியளித்து அருள்புரிந்தார். பதினாறாம் நூற்றாண்டில் விக்கிரமச்சோழனால் கட்டப்பட்டதாகும். ஜெயசிம்மன் என்னும் சோழமன்னன் நாகதோஷம் நீங்குவதற்காக பசுதானம் செய்ததாக கோயில் கல்வெட்டுச்செய்தி கூறுகிறது. காலப்போக்கில் இக்கோயில் ராஜகோபுரம், விமானம் சிதிலமடைந்து போனதால் தற்போது திருப்பணிகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்கலாம்.
சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் 20 கி.மீ., இங்கிருந்து முட்டம் செல்லும் வழியில் 10 கி.மீ., தூரத்தில் முள்ளூர்.
காலை: 8-10, மாலை 6-7.
98400 53289, 97903 33377
மகாலட்சுமி சுப்பிரமணியன்
தல வரலாறு:

சூரியனின் சிவபூஜை:

இருப்பிடம்:
சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் 20 கி.மீ., இங்கிருந்து முட்டம் செல்லும் வழியில் 10 கி.மீ., தூரத்தில் முள்ளூர்.
திறக்கும்நேரம்:
காலை: 8-10, மாலை 6-7.
போன்:
98400 53289, 97903 33377
மகாலட்சுமி சுப்பிரமணியன்