Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா!

நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா!

நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா!

நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா!

ADDED : நவ 06, 2012 05:48 PM


Google News
Latest Tamil News
* கடவுளை தாய், தந்தை, குழந்தை, நண்பன் என அவரவர் விருப்பத்திற்கேற்ப வழிபட்டாலும், தாயாக வழிபடுவதே எளிதாகும். இதன் மூலம் குழந்தையைப் போல, அவருடன் நெருங்கி உறவாட முடியும்.

* மன ஒருமையுடன் உள்ளம் கரைந்து உருகினால், கடவுளின் அருளை நிச்சயமாகப் பெற முடியும்.

* தளராத மனஉறுதி, நன்னடத்தை, தூய்மை, நம்பிக்கை இவையே ஆன்மிகத்தில் உயர்வு பெறுவதற்கான வழிமுறைகள்.

* ஏற்றுக்கொண்ட கொள்கையில் துன்பம் நேரிட்டாலும், உயிரே போக நேர்ந்தாலும் குறிக்கோளில் இருந்து பின்வாங்காமல், அதை நிறைவேற்றிய தீர வேண்டும்.

* உயிர் வாழ உணவு அவசியம் போல சுதந்திரமாக வாழ்வதற்கு தியாக உணர்வு அவசியம்.

* மற்றவர்களின் நன்மைக்காக தன்னையே தியாகம் செய்பவன் மனதில் எப்போதும் அமைதி குடிகொண்டிருக்கும்.

* உண்ணும் உணவுக்கு ஏற்ப மனிதனின் குணம் அமைகிறது. சாத்வீகமான உணவு நல்ல பண்புகளை வளர்க்கும்.

* மனிதருக்குரிய அடிப்படையான குணம் அன்பு. அன்பில்லாதவன் வாழ்வதில் அர்த்தமில்லை.

* சிறிய செயல் செய்பவனைப் பார்த்து நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து இறைவன் சிரிப்பான். உயர்வு தாழ்வு கருதி யாரையும் இழிவாக நினைப்பது கூடாது.

* துக்கப்படுவதால் வாழ்வின் எந்தப் பிரச்னையும் தீர்ந்து விடப்போவதில்லை. மாறாக பிரச்னையின் தாக்கம் தான் அதிகமாகும்.

* துன்பத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே சுகத்தின் அருமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

* அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள். உயிர் உள்ள வரை அறிவுக்கதவு திறந்தே இருக்கட்டும். நாம் வளர்வதோடு அறிவையும் வளர்த்துக் கொள்வதே உண்மையான வளர்ச்சி.

* கடுமையான உழைப்பும், விடாமுயற்சியும் கொண்டவன் எச்செயலிலும் சாதனை புரிய முடியும்.

* கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் நம் குடும்பவாழ்விலும் சரி, சமுதாயவாழ்விலும் சரி.. வளர்ச்சியைக் காண முடியாது.

* நீதியுணர்வே வாழ்வின் ஜீவநாடியாக இருக்கிறது. அதனால் நீதியை நிலைநாட்ட நம்மால் இயன்றதைச் செய்ய முற்பட வேண்டும்.

* சுதந்திரம் இல்லாத மனிதன் உயிர் இல்லாத உடலைப் போன்றவன்.

* பிழையைச் சரிப்படுத்திக் கொள்ள முயலுங்கள். இதனால் யாருக்கும் அவமானம் இல்லை.

* பிறருக்கு உபகாரம் செய்வது நமக்கு நாமே செய்து கொள்ளும் உதவி. பரோபகாரம் செய்வதில் யாரும் அலுத்துக் கொள்ளக்கூடாது.

* நியாயமற்ற ஆசை மனதில் எழும் போதே அதை வளர விடாமல் கிள்ளி எறிந்து விட வேண்டும். இதில் தாமதிப்பது ஆபத்தில் முடிந்து விடும்.

* தர்மத்திற்கு முரண்படாத நல்ல விருப்பங்கள் அனைத்தும் கடவுளுக்கு உகந்தவையே. அதை அடைய முயல்வதில் தவறொன்றும் இல்லை.

* ஒரு தீய எண்ணம் பல தீய எண்ணங்களுக்கு வழி வகுத்து விடும். அதனால், மனம் என்னும் கோட்டையில் பகைவரின் படைகள் நுழைய அனுமதிக்காதீர்கள்.

தைரியம் தேவை என்கிறார் நேதாஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us