ADDED : மே 31, 2024 10:48 AM

அதிசயம் செய்யும் பாடல்கள்
சனாதன தர்மத்தின் அடிப்படை பண்பு அன்பு. 'அன்பும், சிவமும் இரண்டென்பார் அறிவிலார்' என்பார் திருமூலர். 'அவனுடைய அறிவெல்லாம் நம் பக்கம் அன்பென்றும்' என்கிறது கண்ணப்ப நாயனார் வரலாறு. 'அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே' என்பார் வள்ளலார். அத்தகைய அன்பை கடவுள் மீது வைத்தால் அதற்குப் பெயர் பக்தி. அதே அன்பை கடவுள் மீது காட்டினால் அதற்கு 'அருள்' என பெயர். கடவுள் அருளைப் பெற்றவர்கள் அருளாளர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
சிவனை முழுமுதல் கடவுளாக வழிபடும் சைவநெறியில் நால்வர் எனப் போற்றப்படும் அருளாளர்களை பக்தி உலகம் அறியும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சிவனின் பூரண அருளைப் பெற்று பாடல்கள் மூலம் வழிபாடு செய்தனர். அப்பாடல்களே தேவாரம் எனவும், திருவாசகம் எனவும் அழைக்கப்படுகிறது.
திருஞானசம்பந்தர் மூன்று வயதிலேயே அம்பிகையின் ஞானப்பாலை அருந்தி தலங்கள் தோறும் சென்று சிவனைப் புகழ்ந்து பாடினார். அவர் பாடிய பாடல்களில் நமக்குக் கிடைக்கப் பெற்றவை 4158 பாடல்களாகும். மந்திரச் சொற்கள் கொண்ட இப்பாடல்கள் பல அதிசயங்களை இன்றும் நிகழ்த்திக் கொண்டுள்ளன.
அரை நுாற்றாண்டாக தமிழை வளர்க்கிறோம் என்ற பெயரில் நமக்கும், நம் தலைமுறைக்கும் தமிழ் பாடல்களை அறிய விடாமல் செய்ததே தமிழகத்தின் சாதனை. ஏழாம் நுாற்றாண்டில் இருந்து பதின்மூன்றாம் நுாற்றாண்டு வரை தமிழை வளர்த்தது இப்பதிகங்களே ஆகும். இதை நாம் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
தமிழ் பாக்களாகிய இப்பதிகங்களைப் பாராயணம் செய்வதன் மூலம் பல நன்மை நமக்குக் கிடைக்கும். அக்காலத்தில் யாருக்காவது பிரச்னை ஏற்பட்டால் தேவார ஏடுகள் உள்ளவர்களிடம் செல்வார்கள். அவர்களும் திருநீறு அணிந்து பக்தியுடன் தேவார ஏட்டினை சுற்றியுள்ள கயிற்றை இடையே நுழைப்பார்கள். அதில் இடம் பெறும் பதிகத்தைப் பாராயணம் செய்து தீர்வு கிடைக்கப் பெறுவர். இந்த முறைக்கு கயிறு சார்த்திப் பார்த்தல் என்பர். இன்றும் கூட சிலர் இதற்கு வழிகாட்டுகிறார்கள்.
திருஞானசம்பந்தர் சிவத்தலங்களுக்கு எழுந்தருளி பாடல்கள் மூலம் நிறைய அதிசயங்களை நிகழ்தினார். அதிசயம் நிகழ்த்த வேண்டும் எனப் பாடவில்லை. ஆயினும் அவரது பக்தியால், அவை நடந்தன.
சென்னை திருவொற்றியூரில் இருந்து மயிலாப்பூர் நோக்கிச் சென்றார் திருஞானசம்பந்தர். வழிநெடுகிலும் பந்தலிட்டு வாழை, கமுகு தோரணம் கட்டி பக்தர்கள் இருபுறத்திலும் 'அரகர... சிவசிவ...' என கோஷமிட்டபடி வரவேற்றனர். மயிலாப்பூரில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தவர் சிவநேசன் செட்டியார் என்பவர். கோயில் திருப்பணி செய்து கும்பாபிேஷகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அடியார்களுக்கு அன்னதானம் செய்வதில் ஆர்வம் கொண்டவர். தர்மம் செய்வதில் கர்ணனையும் மிஞ்சியவர். அவருக்கு பூம்பாவை என்றொரு மகள் இருந்தாள். அவளை திருஞானசம்பந்தருக்கு மணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். அந்தப் பெண்ணும் சிவபக்தியில் தேர்ந்தவள். ஒருநாள் பூஜைக்கு பூப்பறிக்கும் போது பூநாகம் ஒன்று பூம்பாவையைத் தீண்ட அவள் இறந்தாள். அவள் திருஞானசம்பந்தருக்கு உரியவள் என்பதால் அவளுக்கு இறுதிச் சடங்கு செய்து அவளின் எலும்பு, சாம்பல்களை எடுத்து ஒரு மண் குடத்தில் நிரப்பி வைத்தார்.
ஒருநாள் அந்த மண் குடத்துடன் மேற்கு கோபுர வாசலில் கண்ணீர் மல்க நின்றிருந்தார். வழிபாடு முடித்து கோயிலை வலம் வந்த சம்பந்தர் யார் எனக் கேட்டார்.
உடனே உடனிருப்பவர்கள் தெய்வ பக்தி, குருபக்தி, தானதர்மம் பற்றிச் சொல்லி அவரது மகள் பூம்பாவையின் திருமண முடிவு பற்றியும், பூநாகம் தீண்டி இறந்தது பற்றியும், அவளின் எலும்பு, சாம்பலை தங்களிடம் ஒப்படைக்க கண்ணீருடன் நிற்பதையும் விளக்கினர்.
சம்பந்தர் அருட்கண்ணால் நோக்கினார். அவரின் பக்தி, தொண்டு, இரக்கம், தன் மீதுள்ள ஈடுபாடு இவற்றைக் கண்டு உணர்ந்தார். பின் சிவனை நோக்கி கோயிலில் நடக்கும் திருவிழா பற்றிக் கூறி அவற்றைக் காணாமல் போய் விட்டாயே எனப் பொருள் படும்படி பாடினார். பத்தாவது பாடலில் அவர், 'இன்னும் சில நாட்களில் உன் தந்தையார் திருப்பணி செய்த இக்கோயிலின் கும்பாபிேஷகத்தைக் காணாமல் போனாயோ எனப் பொருள்படும்படி பாடியவுடன் சிவநேசரின் கையில் இருந்த எலும்பும், சாம்பலும் இருந்த குடமானது உடைந்து உயிருள்ள பூம்பாவையாக மாறியது.
அனைவரும் கண்டு அதிசயித்தனர். கபாலீஸ்வரப் பெருமானே இந்த அதிசயம் கண்டு மேற்கு நோக்கித் திரும்பி விட்டார். இன்றும் கூட கபாலீஸ்வரப் பெருமான் மேற்கு நோக்கியே அருள்பாலிக்கிறார்.
இந்த மண்ணில் பிறந்தவர்களின் பயன் ஆவது சிவபெருமானின் அடியவர்களுக்கு உணவு படைத்தல், கோயில் திருவிழாவை தரிசித்தல் ஆகிய இரண்டும் உண்மையானால் நீ உலகத்தவர் முன்பு மீண்டு(ம்) வருவாயாக எனச் சேக்கிழார் பாடுகின்றார்.
ஒரு தமிழ் பக்திப் பாடலுக்கு உயிரற்ற ஒரு பொருளை உயிருள்ள பெண்ணாக ஆக்கி விட முடியும் என்பதை திருஞானசம்பந்தர் நடத்திக் காட்டினார். இன்று நாம் எல்லாம் திருநீறு பூசக் காரணம் திருஞானசம்பந்தர் தான். ஆம்... கூன் பாண்டியன் மதுரையை ஆட்சி செய்த காலம் அது. அப்போது மன்னரைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் சமணர்கள். எனவே மக்களால் திருநீறு பூசவும் வழியின்றித் தவித்தனர். கூன்பாண்டியனின் மனைவி மகாராணி மங்கையற்கரசியார். அமைச்சர் குலச்சிறையார். இருவரும் மதுரை சொக்கநாதரின் அருளால் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தனர்.
திருஞானசம்பந்தர் மதுரையில் தங்கிய மடத்திற்கு தீ மூட்டினர் சமணர்கள். சிவனை வேண்டினார் சம்பந்தர். அந்தத் தீயானது பாண்டியனின் வயிற்றுக்குள் சென்று வெப்பு நோயாக மாறிவிட்டது.
சமணர்கள் எவ்வளவு முயன்றும் நோயை போக்க முடியவில்லை. அரசியார் கேட்டுக் கொள்ள திருஞானசம்பந்தர் அரண்மனைக்கு வந்த சிவனை வேண்டி திருநீற்றின் பெருமையை 'மந்திரமாவது நீறு' என பதிகம் பாடினார். மன்னரின் நோய் தீர்ந்தது. வேந்தனும் ஓங்குக என்ற சம்பந்தரின் திருவாக்கால் கூன்பாண்டியனும், 'நின்றசீர் நெடுமாறன்' ஆகினான். உடல் கூனல் மட்டுமின்றி மனக்கோணலும் நீங்கியது. சம்பந்தரின் பாடல் தாங்கிய ஏடு வைகையை எதிர்த்துச் சென்று கரையேறியது. இந்த இடமே மதுரையில் உள்ள 'திருவேடகம்' ஆகும்.
இவ்வாறு சம்பந்தரின் பக்தித் தமிழ் பாடல்கள் பலப்பல அதிசயங்களைச் செய்தது. திருவீழிமிழலையில் சிவனிடம் பொற்காசு பெற்று பஞ்ச காலத்தில் பசி தீர்த்தார். திருமறைக் காட்டில் மூடிய கோயிலின் கதவைத் திறக்கச் செய்தார். திருப்பாச்சிலாச்சிரமத்தில் மழவன் மகளின் நோய் தீர்த்தார். திருமருகலில் பாம்பு தீண்டிய வணிகனை உயிர்ப்பித்தார். திருவோத்துாரில் ஆண்பனையைப் பெண்பனை ஆக்கினார்.
இப்படி அதிசயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இன்றும் இப்பாடல்கள் பக்தர்களின் வாழ்வில் அற்புதங்களைச் செய்கிறது. சனாதனம் ஆழ்ந்த நம்பிக்கையோடு கலந்தது. நாளும் தேவாரம் பயில்வோம். பரப்புவோம். நல்லதே நடக்கும்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870