Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/திருப்பதி கோதண்டராமர்

திருப்பதி கோதண்டராமர்

திருப்பதி கோதண்டராமர்

திருப்பதி கோதண்டராமர்

ADDED : மே 31, 2024 10:46 AM


Google News
Latest Tamil News
திருப்பதி என்றதும் மலை மீதுள்ள வெங்கடேசப்பெருமாள் தான் நினைவுக்கு வருவார். ஆனால் இங்குள்ள சின்னக்கடை வீதியில் ராமபிரானுக்கு தனிக்கோயில் உள்ளது. இவரை சனிக்கிழமை, புனர்பூச நட்சத்திரத்தன்று தரிசித்தால் விருப்பம் நிறைவேறும்.

இலங்கையில் இருந்து சீதையை மீட்டுச் செல்லும் வழியில் திருப்பதியில் உள்ள வெங்கடேசப் பெருமாளை தரிசித்தார் ராமர். அதன் நினைவாக சோழ மன்னர்கள் காலத்தில் இங்கு கோதண்ட ராமருக்கு கோயில் கட்டினர். பின்னர் விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் திருப்பணி செய்துள்ளார்.

மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சி தருகிறது. கருவறையில் கோதண்டராமர் சீதை, லட்சுமணருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். சன்னதியின் எதிரில் ஆஞ்சநேயர் கைகூப்பியபடி உள்ளார். ஸ்ரீராமநவமியின் போது நடக்கும் பத்து நாள் விழாவில் அனுமந்த வாகன சேவை, திருக்கல்யாணம், பட்டாபிேஷகம், தெப்ப உற்ஸவம் சிறப்பானவை. அமாவாசையன்று அனுமனுக்கு திருமஞ்சனம், துளசி அர்ச்சனை நடக்கும். வெற்றி கிடைக்க துளசி, வெற்றிலை மாலை சாத்துகின்றனர். வைணவத்தின் முதல் குருவான விஷ்வக்சேனர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் உள்ள துவார பாலகர்கள் ஜெய, விஜயர் சிலைகள் கலைநயம் மிக்கவை.

ஸீதாயா வாமபாகே

ஏச்ச லக்ஷமணஸ்ய ச தக்ஷினே

தன்மத்யே ராகவம் வந்தே

தனுர் பநாதரம் ஹரிம்

என்ற ஸ்லோகத்தை பாடியபடி பக்தர்கள் சன்னதியை வலம் வருகின்றனர்.

எப்படி செல்வது: திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ.,

விசேஷ நாள்: ஸ்ரீராமநவமி 10 நாள் உற்ஸவம்

தொடர்புக்கு: 0877 - 223 3333, 227 7777

நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி

அருகிலுள்ள தலம்: சந்திரகிரி கோதண்டராம சுவாமி கோயில் 13 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)

நேரம்: காலை 6:00 - 8:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us