ADDED : பிப் 27, 2025 03:03 PM

எல்லா உயிர்களுக்கும் உயிராக இருப்பதால் ஆத்மகாரகர் என சூரியன் அழைக்கப்படுகிறார். சிவசூரிய நாதர், சூரிய நாராயணர் எனப்படும் இவருக்கு ஒடிசாவில் கோனார்க், ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் அரசவல்லி, கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில் என பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இதைப் போல பெங்களூரு டோம்லுார் பழைய விமான நிலையம் சாலையில் தனி கோயில் உள்ளது. அரசு வேலையில் சேரவும், நன்மை கிடைக்கவும் சூரிய நாராயணரை வழிபடுகின்றனர்.
சோழரின் கட்டடப்பாணியில் அமைந்த ஐந்தடுக்கு ராஜகோபுரம் கோயிலுக்கு அழகு சேர்க்கிறது. அதையடுத்து உயரமான கொடிமரத்தை தரிசித்து நடந்தால் தங்க கலசத்துடன் விமானம் ஜொலிக்கிறது. சன்னதிக்கு இருபுறமும் உள்ள படிகளின் மீது ஏறினால் ஏழு குதிரைகள் பூட்டிய தாமரைத் தேரில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி சூரியநாராயணரை கருவறையில் தரிசிக்கலாம். அருகில் அவரின் பெற்றோரான காஷ்யபர், அதிதி உள்ளனர்.
அரசுவேலை கிடைக்க வளர்பிறை சப்தமியன்று செந்தாமரை மலரால் அர்ச்சனை செய்கின்றனர். சூரிய திசை, புத்தி நடப்பவர்கள் ஞாயிறு தோறும் நடக்கும் பூஜையில் பங்கேற்கின்றனர். பஞ்சமுக விநாயகர், கோதண்ட ராமர், பிரம்மா, சரஸ்வதி, நரசிம்மர், லட்சுமி, வைஷ்ணவி சன்னதிகள் உள்ளன. ராமாயண, மகாபாரத ஓவியங்கள், தசாவதாரம், அஷ்ட லட்சுமி, மீனாட்சி திருக்கல்யாணம் ஆகிய சுதை சிற்பங்கள் பிரகாரத்தில் உள்ளன.
எப்படி செல்வது: பெங்களூரு சிட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 8 கி.மீ.,
விசேஷ நாள்: ஞாயிறு, மாதப்பிறப்பு, ரதசப்தமி.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 80253 50386
அருகிலுள்ள கோயில்: பசவன்குடி நந்தி 10 கி.மீ., (பாவம் தீர...)
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 80266 78777